ஓட்ஸ் என்னும் கொடிய வெளிநாட்டு அரக்கன்... மக்களே ஜாக்கிரதை! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report
966Shares

ஓட்ஸ் நமக்கு தெரிந்த ஒன்று தான். அனைத்து நேரங்களிலும் நாம் எடுத்துக்கொள்ளுமோர் உணவே இந்த ஓட்ஸாகும்.

இதில் ஊட்டசத்துக்களும், ஆற்றல் பண்புகளும் அதிகம் காணப்படுகிறது என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

அதிலும், நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உடல் எடையினை குறைக்க பரிந்துரைக்கப்படும் உணவு.

தற்போது மக்களிடையே ஓட்ஸின் பயன்பாடானது கணிசமாக அதிகரித்துள்ளது. அரிசி, கோதுமை போன்று ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஓட்ஸ் விளைவிக்கப்படுகிறது.

ஓட்ஸில் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உண்டு. அது குறித்து பார்க்கலாம்.

ஓட்ஸில் உள்ள குறைகள்

ஓட்ஸில் ’ஓல்டு பேஷண்டு கோல்டு’ மற்றும் ’ஸ்டீல் கட்’ என இரண்டு வகை உள்ளது. இந்த இரண்டும் ஆரோக்கியமானது தான்.

ஓட்ஸ் நல்லது என்பதற்காக அதை அதிகமாகவோ அல்லது அதனுடன் கண்டதை சேர்த்தோ சாப்பிடக்கூடாது.

ஓட்ஸில் எந்த சுவையும் கிடையாது. தற்போது சுவைக்காக சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபேர்ரி போன்ற பல வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் ஓட்ஸில் உள்ள சத்துக்களானது முழுமையாக கிடைப்பது இல்லை.

கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் அதிகளவு உள்ளதால் இதனை எடுத்து கொள்ளும் அளவு மிக முக்கியம்.

ஓட்ஸில் அதிகளவு சர்க்கரையினை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

ஓட்ஸ் என்பது கொதிக்கவைத்து குடிக்கும் கஞ்சி தான், இது பசியினை கட்டுப்படுத்தும்.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவு விளைந்தும் இதனை அதிகம் உபயோகிக்காமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இவற்றிற்கு மேலாக கம்பு, கேழ்வரகு போன்ற நவதானியங்கள், ஓட்ஸினை விட 4 மடங்கு அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது.

எனவே வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுவதை விட நம் தமிழர்களின் உணவுகளை சாப்பிடுங்கள். ஓட்ஸ் மாத்திரம் இல்லை தற்போது வரும் எல்லா வெளிநாட்டு உணவுகளிலும் பக்கவிளைவுகள் உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.