அசிங்கமா தொங்கும் பானை வயிறு ஒரே நாளில் மாயமாகனுமா? வெந்நீரில் இந்த சக்திவாய்ந்த பொருளை கலந்து வெறும் வயிற்றில் குடிங்க!

Report
1003Shares

தேன் ஆரோக்கியத்தையும், சுவையையும் ஒருங்கே தரும் அற்புத மருந்தாகும்.

ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது பானங்கள் மற்றும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.

அதிலும் தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிடுவதும் ஒரு நல்ல வழிமுறை.

குறிப்பாக வெந்நீரில் சிறிதளவு தேனையும், சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றையும் கலந்தும் குடிக்கலாம்.

இப்படி வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால், உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும்.

வெந்நீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் வயிறு சுத்தமாக அது உதவும். உணவுப்பொருளை கரைக்கக் கூடிய திரவங்களை நுரையீரலில் உற்பத்தி செய்ய வைக்க இந்த முறை உதவும்.

எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும்.

அதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும். இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். இந்த வழியில் வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.

வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிட்டு, உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் இதர பொருட்களை சுத்தம் செய்து, உப்புசமடைதல், வயிறு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.

அதன் காரணமாக உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீருடன் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமடைவதால், தேவையற்ற வகையில் உடல் எடையை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் அசுத்தங்களும் வெளியேற்றப்படுகின்றன.

வெந்நீரில் உள்ள சுத்தம் செய்யும் குணங்கள் தேனுடன் கூட்டாக சேர்ந்து உடல் எடைய குறைத்து விடுகிறது.