இந்த சக்தி வாய்ந்த இரண்டு உணவு பொருளையும் சேர்த்து சாப்பிட்டால் மனநிலை கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம்? ஜாக்கிரதை

Report
757Shares

எந்த வகை சமையலாக இருந்தாலும் சரி, அவற்றில் சில பொருட்கள் கட்டாயம் இடம் பிடிக்கும்.

அவற்றில் ஒன்று தான் வெங்காயம் மற்றும் பூண்டு. பொறுத்தவரை, வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவை இரண்டுமே உணவின் சுவையை மேலும் கூட்டுவதோடு, உடலிற்கும் நிறைய ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன.

உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது, அதிகப்படியான கொழுப்பை குறைப்பது, இயற்கை இரத்த சுத்திகரிப்பானாக செயல்படுவது, ஆன்டி-ஃபங்கல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பது மற்றும் ஆன்டி-பயாடிக்காக செயல்படுவது என இவற்றின் ஆரோக்கிய பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும், பல காரணங்களால் இவ்விரண்டையும் சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்தப்படுவதையும் பார்க்கிறோம். ஏன் பதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று உயிர் சக்திகள் உண்டு. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான உடலமைப்பை வழங்குகின்றன.

பித்தம் ஆனது தீ மற்றும் நீரின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளையும், உடலின் வெப்பநிலை மற்றும் ஹார்மோன் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

சல்பர் நிறைந்த எந்த மூலப்பொருளோ, வெங்காயம் மற்றும் பூண்டு மிகவும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிவை. அவை உடல் மற்றும் உணர்ச்சி மட்டங்களில் பித்தத்தை மிகவும் மோசமாக்குகின்றன. அமில பிரதிபலிப்பு, புண்கள், பெருங்குடல் அழற்சி, நெஞ்செரிச்சல், குடல் அழற்சி, சரும வெடிப்பு அல்லது சிவத்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், பிரச்சனை மேலும் மோசமாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையான காரணம்!

  • வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோபம், ஆக்ரோஷம், அறியாமை, சோம்பல், பதட்டம் மற்றும் பாலியல் ஆசை அதிகரிப்பு போன்ற சில எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • எனவே, தியானம் செய்வோர் அல்லது ஆன்மீக பாதையை பின்பற்ற விரும்புவோர், வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர்.
  • வெங்காயம், பூண்டு போன்ற ராஜ்சிக் உணவுகள் ஒருவரின் மனநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.
  • அவை ஒரு நபரின் கவனத்தை சிதறச்செய்யலாம், மனநிலையை பாதிக்கலாம், மேலும் நிலையற்ற புத்தியையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
  • ராஜ்சிக் உணவு என்பது சூடான, காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் கலவையாகும்.
  • இது எதிர்மறை, ஆர்வம், அமைதியின்மை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

loading...