நெல்லிக்காய் உடல், சருமம், கூந்தல் என மூன்றுக்குமே அதிக ஆரோக்கியம் தரும். இளமையை தக்க வைக்கும் சிறந்த கனி என்பது போல இது முடி உதிர்தல், இளநரை, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.
கூந்தலின் கருமையான நிறத்தை பாதுகாக்க நெல்லிப்பொடி உதவும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி பித்தம் காரணமாக தலைமுடி அதிகமாக நரைக்க தொடங்குகிறது.
நெல்லிக்காய் பெரும்பாலும் இயற்கை மற்றும் செயற்கை ஹேர் டை என இரண்டிலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
கூந்தல் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் நெல்லி எண்ணெய் உதவும். தினமும் இதை பயன்படுத்தவில்லை என்றாலும் வாரத்துக்கு மூன்று நாட்கள் வரை இதை கூந்தலுக்கு தடவி கொள்ளலாம். தலைக்கு குளிக்கும் போது இந்த எண்ணெயை தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.
loading...