குழந்தைபெற்ற பெண்கள் சுண்டைகாயை சாப்பிடலாமா?.. பல நோய்களுக்கு மருந்தின் பயன்கள்

Report
83Shares

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

மேலும், முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் இரத்த சோகை ஏற்படாமல் பாதுக்காக்க முடியும். இரத்த சோகையை விரட்டும் தன்மைக் சுண்டைக்காயிற்கு உண்டு.

இரத்த குழாய்களில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைக்க இது உதவுகிறது. மேலும் உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் நடுக்கம், மயக்கம், சோர்வு, மூச்சுக் கோளாறுகள் போன்றவை நீங்கும்.

குழந்தைகள் இதை சாப்பிடுவதால் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும். வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வலி, மலச்சிக்கல் போன்றவை வராமல் பார்த்து கொள்ளலாம்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. குழந்தை பெற்ற பெண்மணிகள் இதை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

loading...