நீரிழிவு நோயாளிகள் கொழுப்பு மீன்களை உட்கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிகிட்டு சாப்பிடுங்க

Report
126Shares

மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன.

மீனை தினமும் உங்கள் உணவு பட்டியலில் சேர்ப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நலன்களை இப்போது காண்போம்.

  • தினமும் மீன் சாப்பிடுவதால், இரத்தக் குழாய் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயங்கள் குறைகின்றன.
  • இதய ஆரோக்கியத்திற்கு உகந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளது. இந்த சத்து , அழற்சியை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது .
  • மூளை சீராக செயலாற்ற, மீன் உணவுகள் பெருமளவில் உதவுகின்றன.
  • இதனால், அல்சைமர் நோய்க்கு, மீன் சாபிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் மூளை சீரழிவு குறைகிறது.
  • மூளை செயல்பாடுகளில் ஏற்படும் பல்வேறு சிக்கலும் தடுக்கப்படுகிறது.
  • மனச்சோர்விற்கான அறிகுறியை உணர்பவர்கள், மீனை சாப்பிடலாம்.
  • மீன் அல்லது மீன் எண்ணெய், மனச்சோர்வின் அறிகுறியை குறைத்து சீரான மன நிலையை தருகிறது. இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
  • மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கண் பார்வையை அதிகரித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • மூளை மற்றும் கண் ஆகிய இரண்டின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகவும் தேவைப்படுகிறது.
  • நீண்ட நேரம் தூக்கம் வராமல், தவித்து கொண்டிருப்பவர்கள், மீனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  • மீனை அதிகம் உட்கொள்பவர்கள், நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம், மீனில் உள்ள அதிகமான வைட்டமின் டி சத்து .
  • உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை மீனுக்கு உள்ளது.
  • மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு மட்டும் இல்லாமல், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கிறது.
  • கொழுப்பு மீன்களை உட்கொள்வதால், டைப் 1 நீரிழிவு நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
  • மீனில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.