உணவு மூலம் கொரோனா பரவுமா? பரவாதா? மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் கூறுவது இதுதான்

Report
175Shares

உணவு மற்றும் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இருந்து இறக்குமதியான கோழி இறைச்சி மூலம் சீனாவில் இரு மாகாணங்களில் கொரோனா பரவியிருப்பதாக தகவல் பரவியது.

அங்குள்ள இரண்டு மாகாணங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு அதுவே காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

உணவுச் சங்கிலி மூலம் நோய் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்பதால் மக்கள் பயமில்லாமல் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே சீனாவின் குற்றச்சாட்டு தொடர்பாக பிரேசில் விவசாய அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.