கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க

Report
169Shares

குறிப்பாக இன்று எதிலும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதில் கடைகளில் இருந்து வாங்கி வரும் மளிகை பொருட்களில் இருந்து, காய்கறிகள், பழங்கள் என்று எதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அதை பயன்படுத்துவதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.

என்ன தான் கொரோனா வைரஸ் உணவுகளின் மூலம் பரவாது என்று கூறப்பட்டாலும், நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம் தானே. கொரோனா பரவும் காலத்தில் கடைகளில் வாங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்படி சுத்தம் செய்வது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளது.

அதைப் படித்து பின்பற்றி, உங்கள் குடும்பத்தை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

டிடர்ஜெண்ட்/சோப்புகள்

ஆபத்தானவை சுத்தம் அவசியமானது தான். கிருமிகளை அழிப்பதில் டிடர்ஜெண்ட்டுகள்/சோப்புக்களை விட சிறந்த பொருட்கள் வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும், உணவுப் பொருட்களை சுத்தம் செய்வது என்று வரும் போது, இந்த மாதிரியான பொருட்களைப் பயன்படுத்துவது என்பது ஆபத்தானது. எனவே எக்காரணம் கொண்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை டிடர்ஜெண்ட்டுகள் பயன்படுத்தி சுத்தப்படுத்தாதீர்கள்.

சுடுநீர்

காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்ததும், முதலில் ஓடும் நீரில் 3-5 நிமிடம் கழுவ வேண்டும். பின் அதை ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை எடுத்து பயன்படுத்துங்கள் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு, மஞ்சள், வினிகர்

கலவை உப்பு, மஞ்சள் மற்றும் வினிகரை ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, அதில் சுடுநீரை ஊற்றி, வாங்கி வந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இந்த கலவையில் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் அந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாதாரண நீரில் நன்கு கழுவி, உலர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்கரப்

காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஏதேனும் ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, பின் மிகவும் குளிர்ச்சியான நீரில் 1-2 நிமிடம் கழுவுங்கள். அதன் பின் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.