பூண்டு மட்டும் போதும்! உயிருக்கே ஆபத்தான இந்த நோய்களை பற்றி இனி கவலை வேண்டாம்

Report
453Shares

சைவ உணவாக இருந்தாலும்,அசைவ உணவாக இருந்தாலும் பூண்டு சேர்த்து சமைத்தால் அதன் சுவையே தனி சுவைதான்.

பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது என நாம் அனைவரும் அறிவோம்.

பூண்டின் முழு பலனும் கிடைக்க பூண்டை எவ்வாறு சாப்பிட வேண்டும், எத்தனை பூண்டு பற்கள் சாப்பிட வேண்டும் , பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை அறிந்து உண்டால் உயிருக்கே ஆபத்தான நோய்களையும், ஏற்கனவே வந்த நோய்களையும் குணப்படுத்தும் ஒரு வரப்பிரசாதமாக பூண்டு அமைகிறது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும்,விட்டமின்களும், அயோடின் ,சல்பர் ,குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன.

நம் உணவில் தினமும் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும் .இதற்கு காரணம் இதில் உள்ள சல்பர்.

மேலும் ஆஸ்தியோபொரோசிஸ் மற்றும் ஆர்தரிடிஸ் போன்ற நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது பூண்டு.

உயர் இரத்த அழுத்தம்,பக்கவாதம்,மாரடைப்பு ,சிறுநீரக செயலிழப்பு ,கண்பார்வை இழப்பு இப்படி பல ஆபத்தான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம்.

பூண்டில் உள்ள அலிசின் என்ற வேதிப்பொருள் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி. பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் ,பல் சொத்தை .ஈறு பிரச்சனை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மலேரியா ,காசநோய்,யானைகால்நோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் சக்தி கொண்டது.

ஆஸ்துமா,நுரையீரல் கோளாறுகள் நீங்கும். பூண்டு கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும்.

பூண்டை எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்

பூண்டை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால்தான் பூண்டின் முழுபலனும் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 1 அல்லது 2 பூண்டுப்பல் போதுமானது. பூண்டின் வாசனை சிலபேருக்கு பிடிக்காது.

அவர்கள் பூண்டை பொடியாக நறுக்கி 5 நிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள். அவ்வாறு செய்யும் போது பூண்டின் கெட்ட வாடை நீங்கி, மருத்துவ தன்மையை அதிகரிக்கக்கூடிய அலிசின் உற்பத்தியும் அதிகமாகும்.

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.முடியாதவர்கள் இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடலாம் . உண்மையில் பூண்டை விலைமதிப்பற்ற மருந்து என்றே சொல்லலாம்.

loading...