இனியாவது திருத்திக்கலாமே!..ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் அன்றாடம் செய்யும் தவறுகள்

Report
168Shares

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம்.

கைகளை கொண்டு வெறுமென துடைப்பதை தவிர்த்துவிடுங்கள். சுத்தமான டவல் அல்லது கர்சீப் கொண்டு துடைக்க பழகுங்கள். ஏனெனில், வியர்வையில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

சிலர் ஓர் நாளுக்கு இரண்டு மூன்று முறை (காலை, மாலை, இரவு) குளிப்பார்கள். இது உங்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும். எனவே, இதை தவிர்த்துவிடுங்கள்.

தினமும் ஒருமுறை மட்டும் பல் துலக்குவது போதாது. காலை, இரவு என இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். ஏனெனில், இரவு சாப்பிட்ட உணவின் மூலமாக தான் நிறைய பாக்டீரியாக்கள் உண்டாகின்றன.

அளவுக்கு அதிகமாக கை கழுவும் திரவத்தை பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதிகமாக பயன்படுத்துவது சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

சாப்பிடுவதற்கு முன்பு, பிறகு மட்டுமின்றி, கழிவறை சென்று வந்த பிறகு, அழுக்கான பொருட்களை கையாண்ட பிறகு, வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய பிறகும் கூட கண்டிப்பாக கை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே பாக்டீரியா தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.

தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட், பாய்கள் போன்றவற்றை மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலமாக தான் நிறைய சுவாச பிரச்சனைகள் வருகின்றன.

உள்ளாடைகளை வாஷின் மெஷினில் துவைக்க வேண்டாம். முக்கியமாக மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைப்பதை தவிர்க்க வேண்டும். இதமான நீரில் தான் உள்ளாடைகளை துவைக்க வேண்டும்.

loading...