இந்த பழத்தை சாப்பிட்ருக்கீங்களா? இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க... ஏன் தெரியுமா?

Report
378Shares

கிவனோ என்பது ஒரு வகை முலாம்பழம் ஆகும்.

இதன் மருத்துவ குணங்கள் காரணமாக இந்தியாவில் மேல்தட்டு பழக்கடைகளில் இந்தப் பழம் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

முள் முலாம் பழம் என்ற பெயர் பரவலாக அழைக்கப்படும் மற்றொரு பெயராகும். இதன் காரணம் இந்தப் பழம் வெளியே ஆரஞ்சு நிறத்தில் அல்லது தங்க நிறத்தில் காணப்படும். பழத்தின் வெளிப்புறத்தில் சிறு முட்கள் காணப்படும் .பழத்தின் உள்ளே கிவி பழத்தில் உள்ளது போல் கூழ்போன்று காணப்படும்.

இந்த பழம் பலவிதங்களில் உடல்நலத்திற்கு உதவுகிறது. இந்தப் பழங்கள் நாட்பட்ட நோய்களை குணமாக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும், சருமத்தை பாதுகாக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பழத்தை உண்பதன் மூலம் கண்கள் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்தப் பழம் செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் இந்த வகை பழம் காயங்கள் குணப்படும் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

நன்மைகள்

 • இந்த பழத்தை உண்பதன் மூலம் அதிக பசியில் இருந்து விடுபட முடியும்.
 • இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மேலும் அதிக உணவு உண்பதைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறையும்.
 • இந்த பழத்தில் விட்டமின் ஏ மிக அதிக அளவில் காணப்படுகிறது.
 • விட்டமின் ஏ ஒரு வகையான கரோட்டினாய்டு ஆகும், இது கண் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக(Anti Oxident) செயல்படுகிறது.
 • இது கண் பார்வையை சரி செய்ய மற்றும் அதிகரிக்க உதவுகிறது. இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண்புரை ஏற்படுவதை தடுக்கலாம்.
 • இந்த பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள், அதிக அளவிலான கரிம சேர்மங்கள்(organic compounds), இயற்கையான ஆக்சிசனேற்றிகள் உடலின் உள்ளும் புறமும் ஆரோக்கியத்தை அதிகரித்து முதுமையை தடுக்கின்றன.
 • இந்த வகை பழங்கள் உடலின் சர்மத்தில் ஏற்படும் வடுக்கள் மற்றும் காயங்களினால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கின்றன மேலும் சுருக்கங்களை தடுக்கின்றன.
 • அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலின் பாகங்களுக்கு தேவையான சத்துக்களை அளித்து அவை சிறப்பாக செயல்பட உதவுகின்றன. உள்ளும் புறமும் சிறப்பாக செயல்பட்டால் முதுமை தன்மை இல்லாமல் இளமையாக வாழலாம்.
 • எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் இது எலும்புகளை தலமாகவும் உறுதியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
 • இந்த கிவனோ பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இதர தாதுப்பொருள்கள் உள்ளன.
 • எலும்புகளையும் வலிமைப்படுத்தவும் எலும்பு புரை வராமல் தடுக்கவும் இந்தப் பழம் உதவும். இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் குறைபாடுகளை சரி செய்தல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

loading...