வீட்டில் வளரும் அதிசய பொருளை தினமும் பாலில் கலந்து குடிங்க! நன்மைகள் கிடைக்கும்

Report
346Shares

தற்போது நாம் அனைவரும் மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மனச்சோர்வில் இருக்கிறோம்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இப்போதெல்லாம் நிறைய பேர் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மட்டுமே உங்களுக்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. தமிழர்களின் பல வீடுகளிலும் புனித செடியாக வளர்க்கப்படும் துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

துளசி பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. அதற்கு துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடுவதைத் தவிர, பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அதன் மருத்துவ பண்புகள் அதிகரித்து, உடல் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படும்.

கீழே துளசி பாலை எப்படி தயாரிப்பது, எப்போது குடிப்பது நல்லது, துளசி பாலைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

  • துளசி பாலில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இது உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கும்.
  • அதோடு சிறுநீரகத்தில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. இது படிப்படியாக சிறுநீரக கற்களைக் கரைக்கும்.
  • துளசியில் யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சிறப்பாக செயல்படவும் செய்கிறது.
  • மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது. அதோடு, பால் சிக்கலைத் தடுத்து இதயத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
  • துளசியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கின்றன.
  • அத்தகைய துளசி பாலுடன் இணைந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, பருவக்கால சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • துளசி மற்றும் பால் இரண்டுமே குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒரு டம்ளர் துளசி பாலைக் குடித்த பிறகு, நீங்கள் சற்று நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.
  • நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்த பிறகு, மூளைக்கு ஓய்வு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
  • இந்நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான துளசி பாலைக் குடிப்பது, நன்றாக உணர வைக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.
  • துளசி மற்றும் பாலில் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.
  • இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய்க்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவும். ஆகவே ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாகவும், பாதுகாப்புடனும் இருக்க தினமும் ஒரு டம்ளர் துளசி பால் குடியுங்கள்.

துளசி பாலை எப்போது குடிப்பது நல்லது?

துளசி பாலில் உள்ள முழு சத்துக்களையும் பெற, அதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் அதன் முழு நன்மைகளையும் எளிதில் பெறலாம்.


loading...