அரிசி மாவை இப்படி பயன்படுத்தி வந்தால் போதுமாம்.. அனைத்து சரும பிரச்சினைகளும் தீரும் அதிசயம்..!

Report
443Shares

இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம். அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது.

எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வயிற்றில் போடுபவர்கள் தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இதை தடவி பிறகு குளிக்கலாம். தினமும் இதை பயன்படுத்தி வந்தால் விரைவில் தழும்புகள் மறைந்து சருமம் சீராக மாறும்.

அரிசி மாவு மட்டும் அல்ல அரிசி கழுவிய நீரை கூட சருமத்துக்கு பயன்படுத்தலாம். இவை வரித்தழும்புகள் இருக்கும் இடத்தை மென்மையாக மாற்றும்.

தேவை

அரிசி மாவு - 3 டீஸ்பூன்

காய்ச்சாத பால் / பன்னீர் - 3 டீஸ்பூன்

தயிர் - 3 டீஸ்பூன்

அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பலன்கள்

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.

சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.

அரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது அவ்வபோது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.

அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.

விழாக்களுக்கு செல்லும் போது அதிக மேக் அப் பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப் பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு தூங்கும் போது மேக் அப் கலைத்த பிறகு படுக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.

loading...