பெண்களே அந்தரங்க உறுப்பில் இதையெல்லாம் பயன்படுத்தாதீங்க

Report
2079Shares

பூப்படைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் 28- 32 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ரத்தப்போக்கு நடைபெறும்.

இதன்போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரபமான அறிகுறிகள் தோன்றுகின்றன.

இவை போன்ற நேரங்களில் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் நன்மை பயக்கும், அதுமட்டுமின்றி பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்தது 4 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்றுவதும் அவசியம்.

இல்லையெனில் அதுவே பக்டீரியல் தொற்றுக்கு காரணமாகிவிடுகிறது, இதுபற்றி தெளிவாக விளக்குகிறார் மருத்துவர்.

அவரின் முழுமையான பேட்டியை காண,

அந்தரங்க உறுப்பில் வலி எரிச்சல் இருந்தால்...
  • பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.
  • 1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.
  • ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.
  • கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
தடுக்கும் முறைகள்
  • இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
  • குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள். நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.
  • உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள். பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

இந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக யோனிப் பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம்.

loading...