இதய பிரச்சினை, நீரிழிவு நோய்க்கு தீர்வு.. இந்த ஒரு பொருள் தான் நம் முன்னோர்களின் வரப்பிரசாதம்!

Report
1018Shares

இந்தியாவில் காணப்படும் மரங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அதில் ஒன்று தான் இலுப்பை மரம். இந்த மரத்தின் பூ, இலை, காய், வேர் என்று அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது.

இலுப்பை மரத்தின் பாகங்கள்

இந்த மரத்தின் பூக்கள் மற்றும் விதைகள் உண்ணக் கூடியது. இந்த மரத்தின் பழங்களை நீங்கள் காய்கறிகளாக பயன்படுத்தலாம். இந்த மரத்தின் விதைகளில் இருந்து இலுப்பை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

இதை பழங்குடி மக்கள் சமையல் எண்ணெய்யாகக் கூட பயன்படுத்தி வருகின்றனர். நம் ஊர் மக்கள் இந்த எண்ணெய்யை வீட்டில் விளக்கேற்ற பயன்படுத்துகின்றனர். மேலும் இலுப்பை எண்ணெய் தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, சோப்பு தயாரிப்பு, வெண்ணெய் தயாரிப்புகள் போன்றவற்றிலும் பயன்பட்டு வருகிறது.

மருத்துவ பயன்கள்:

சரும பராமரிப்பு

இலுப்பை எண்ணெய் சருமத்திற்கு தோல் மினுமினுப்பை கொடுக்கக் கூடியது. எனவே உங்க சரும பிரச்சனைகள் நீங்க இலுப்பை எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். விதைகளில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட பிறகு உள்ள பிண்ணாக்கை ஊற வைத்து அரைத்து வடிகஞ்சியுடன் தேய்த்து குளித்து வந்தால் சரும வியாதிகள் நீங்கும். எனவே தான் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தி வந்தார்கள்.

இதய நோய்கள் குணமாகும்

தற்போது அதிகமான மக்கள் இதய நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இதய நோய்களிலிருந்து உங்களை காக்க இலுப்பையின் விதைகள் பயன்படுகிறது. ஏனெனில் இந்த விதைகளில் உள்ள ஒலிக் அமிலம் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. எனவே இலுப்பை எண்ணெய்யை சமையல்களில் தாராளமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

கல்லீரல் ஆரோக்கியம்

நமது உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் இலுப்பை நமது கல்லீரல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கல்லீரல் சுவர்களை வலுப்படுத்துகிறது. குளுட்டமிக்-ஆக்சலோஅசெடிக் டிரான்ஸ்மினேஸ் மற்றும் இரத்தத்தில் அலனைன் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதன் ஆக்ஸினேற்ற தன்மை கல்லீரல் செல்கள் அழிவதை தடுக்கிறது. கல்லீரல் நோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த..

இன்றைய காலக்கட்டத்தில் நீரிழிவு நோயால் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் முக்கியமான உறுப்புகளும் பாதிப்படைகிறது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இலுப்பை மரத்தின் பட்டைகள் பயன்படுகிறது. இலுப்பை மர பட்டைகளின் சாற்றை கொண்டு விலங்குகளில் ஒரு ஆய்வு நடத்தினர். அப்பொழுது இந்த சாறு நம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பது தெரிய வந்தது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

பக்க விளைவுகள்:

இலுப்பையை அதிகமாக எடுத்துக் கொள்வது கருவுறாமை பிரச்சினையை உண்டாக்கலாம்.

இலுப்பை நீரிழிவு மருந்துகளுடன் வினைபுரியலாம். எனவே இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

இலுப்பையின் விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குகிறது. எனவே நீங்கள் ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் போன்ற ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது நோயெதிரிப்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தாலோ இலுப்பையை எடுத்துக் கொள்ளாதீர்கள். மருத்துவர்களிடம் ஒரு முறை அணுகிக் கொள்வது நல்லது.

loading...