தினசரி காலை இதை மட்டும் குடிங்க... நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும்! உயிரைப்பறிக்கும் வைரஸ் கிட்டயே வராது

Report
721Shares

உணவின் மூலம் மட்டுமன்றி சில மூலிகை பானங்கள் அருந்துவதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

மஞ்சள் கஷாயம் :

தேவையான பொருட்கள் :
  • மிளகு பொடி - 1/2 tsp
  • எலுமிச்சை சாறு - 1/2 tsp
  • மஞ்சள் - 1 tsp
  • தண்ணீர் - ஒரு கிளாஸ்
செய்முறை :
  • தண்ணீரை சூடாக்கி அதில் மிளகுப் பொடி, மஞ்சள் கலந்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • அதில் உள்ள மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மிளகு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கொழுப்பும் கரையும்.

மூலிகை டீ :

தேவையான பொருட்கள்
  • துளசி - 5-6 இலைகள்
  • இஞ்சி - 1/2 இஞ்ச்
  • ஏலக்காய் பொடி - 1 tsp
  • மிளகு பொடி - 1/2 tsp
  • சீரகம் - 1 tsp
  • பட்டை பொடி - 1 tsp
  • மஞ்சள் - 1/2 tsp
  • டீ தூள் - 1 tsp
  • வெல்லம் - 1 tsp
செய்முறை :
  • தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் துளசி இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். அதோடு டீ தூள், சீரகம் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு கொதிக்க வையுங்கள். இஞ்சியை தட்டிப்போடுங்கள்.
  • நன்கு கொதித்ததும் வடி கட்டி குடித்துப் பாருங்கள். சளி, இருமல் என எதுவுமே உங்களை நெருங்காது. நோய் தொற்றுகளும் நெருங்காது.
loading...