இந்த எடைக்கு மேல் உள்ளவர்கள் அவதானமாக இருக்கவும்! அலட்சியம் வேண்டாம்

Report
1598Shares

கொரோனா வைரஸ் உடல் பருமனுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உலக உடல் பருமன் அமைப்பின் கூற்றுப்படி, உடல் பருமனாக இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகள் இந்த நோயால் மோசமாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகள் ஆரோக்கியமான எடை கொண்ட பெரியவர்களை விட எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பிஎம்ஐ அளவு

  1. என்ஹெச்எஸ் படி, 18.5 க்குக் கீழே பிஎம்ஐ என்றால் நீங்கள் எடை குறைந்தவர்.
  2. பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
  3. பிஎம்ஐ 25 முதல் 29.9 வரம்பிற்கு இடையில் இருந்தால், நீங்கள் அதிக எடை கொண்டவர் என்றும் 30 முதல் 39.9 வரம்பிற்குள் பிஎம்ஐ இருந்தால், நீங்கள் அதிக உடல் பருமன் கொண்டவர் என்று அழைக்கப்படுவீர்கள்.

உடல் பருமனின் அபாயங்கள்

  • உடல் பருமன் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி வீக்கத்தை அதிகரிக்கும்.
  • இதனால் உங்கள் உடல் தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்துப் போராடுவது கடினம்.
  • கூடுதலாக, உடல் பருமன் நுரையீரலில் அதிக அழுத்தத்தையும் தருகிறது.
  • இது கொரோனா வைரஸ் சிக்கல்களின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
  • உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மெதுவான வளர்சிதை மாற்றம், ஸ்லீப் மூச்சுத்திணறல், இதய நோய் மற்றும் பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் கீல்வாதம் போன்ற பிற சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

loading...