கஷ்டத்தின் பலன் இவ்வளவு மகிழ்ச்சியா...? நீங்க யாராவது உணர்ந்திருக்கிறீர்களா!

Report
209Shares

இவ்வுலகில் கஷ்டம் என்ற வார்த்தையை சொல்லாதவர்களே இருக்க முடியாது.

கஷ்டத்தின் பலன் இவ்வளவு மகிழ்ச்சி இருக்குமா? என்று நினைக்கும் அளவிற்கு மனதை நெகிழ வைக்கும் பால் கூறும் தனது கஷ்டத்தின் கதை இதோ!

நான் முதலில் பசுவின் வயிற்றில் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். பின் அடுப்பைப் பற்ற வைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, என்னை சூடாக்கினாள்.

எனக்கு அந்த சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனையா? என்று வருந்தினேன்.

பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரம் ஆக ஆக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள்.

அதன் பிறகு திரவமாக இருந்த நான் திடமாக மாறிப் போனேன். அப்போது எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

பின் என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள்.நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

அதன் பின் என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு பட்டர் என்று பெயர் வைத்தார்கள். பட்டர் என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை பெட்டர் ஆகுமா? என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கி, எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.

உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பசுவின் வயிற்றில் பாலாக இருந்த நான், பல கஷ்டங்களுக்கு பின் நெய்யாக இருக்கிறேன் என்று வருந்திக் கொண்டு இருக்கும் போது, இரண்டு பெண்கள் பேசுவதை கேட்டேன்.

ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை? என்று கேட்டாள்.அதற்கு அடுத்தவள், அரை லிற்றர் 20 ரூபாய் என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிற்றர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான் என்றாள்.

அப்போது தான் எனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டத்தின் மதிப்பு எனக்கு புரிந்தது என்று பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

பால் கதையின் தீர்வு என்ன?

நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் பல சவால் மற்றும் கஷ்டங்கள் தான் நமது வாழ்க்கையின் தரத்தையும், மதிப்பையும் உயர்த்துகிறது என்பதே உண்மை..

8462 total views
loading...