தினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும்! இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை?

Report
1857Shares

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய்.

தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து முறைகளிலும் உணவில் பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. பச்சைமிளகாயில் பலவித வைட்டமின்கள் இருப்பதால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

பச்சைமிளகாயில் ஜீரோ கலோரிகள் உள்ளது, மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சைமிளகாய் சேர்த்துக்கொள்வது 50 சதவீதம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை மிளகாயின் பயன்கள்
இரத்த சர்க்கரை அளவு குறையும்

பச்சை மிளகாய் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின், பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும்.

புற்றுநோய்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் உட்பொருள், புற்றுநோயின் வளர்ச்சியை தடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக ஆண்கள் பச்சைமிளகாய் சேர்த்த உணவை உட்கொள்வதால், அவர்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து விடுபட உதவும்.

எலும்பு வளர்ச்சிக்கு துணை புரியும்

மிளகாயில் அதிக அளவு கால்சியம் உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும். சிலருக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக கால்சியம் உள்ள மிளகாயை உண்ணலாம். பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை கொடுப்பதால், திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம்.

கொழுப்பை குறைக்கவும் உதவும்

மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வயிற்று அல்சரை தடுக்கும்

வயிற்று அல்சரை பொறுத்த வரை, மிளகாயை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் மிளகாயானது, வயிற்றில் பாதுகாப்பான ஜூஸ்களை சுரக்க உதவி புரிந்து, அதன் மூலம் வயிற்றில் தேங்கியிருக்கும் பாக்டீரியாக்களை கொன்று, அல்சர் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

75468 total views
loading...