இந்த எண்ணெய்களை இதனுடன் கலந்து உபயோகியுங்கள்.. முடி உதிர்வை தடுக்கலாம்..!

Report
473Shares

இன்றைய தலைமுறை ஆண்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.

மேலும் சில ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல், தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து உதிரத் தொடங்கும் போது, தலைமுடி உதிர்ந்து, வழுக்கைத் தலையுடன் வலம் வரும் போது தான் அதன் அருமை நம் மக்களுக்குப் புரிகிறது.

இந்திய மக்களுக்கு அழகே கருமையான முடி தான். அத்தகைய முடி தற்போது பொலிவிழந்து, அதன் நிறத்தையும் இழந்து வருகிறது. தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இந்திய எண்ணெய்களைப் பயன்படுத்துவது நல்லது.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் வகைகள் நிறைய இருந்தாலும், ஒருசில இந்திய எண்ணெய்களும் முடியை நம்ப முடியாத வகையில் ஆரோக்கியத்துடன் தலைமுடியை வைத்திருக்கின்றது. முடி வளர்ச்சியுடன் அதன் கருமை நிறத்தையும் பாதுகாப்பதோடு, அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் தலையில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும், இந்திய எண்ணெய்கள் சரிசெய்யக்கூடிய வகையில் அதற்கு சக்தி உண்டு.

தேங்காய் எண்ணெய்:

இந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

நெல்லிக்காய் எண்ணெய்:

நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டிஷனர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.

மருதாணி எண்ணெய்:

மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.

கருஞ்சீரக எண்ணெய்:

கருஞ்சீரகம் பொதுவாக சமையலில் தான் பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் அடத்தியாக இருக்கும். அத்தகைய எண்ணெயை தலைக்கு பயன்படுத்தினால், முடியில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து முடிக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கும்.

16646 total views
loading...