நாம் உண்ணும் உணவில் இவ்வளவு கலப்படமா?.. பச்சை பட்டாணியில் ஒளிந்திருக்கும் கலப்படத்தால் உயிரையே பறிக்கும் அபாயம்..!

Report
219Shares

உணவுதான் உடல் வலிமைக்கு ஆதாரம் என்பது பழையக்காலம். உணவே மருந்து என்பது இந்தக் காலம். ஆனால் அந்த உணவு பலநேரங்களில் உயிரையே போக்கக்கூடியதாக மாறிவிடுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் கலப்பட உணவுகளை உட்கொண்டு அவை புட் பாய்சனாக மாறி மருத்துவமனைக்கு வரும் மக்களே அதிகம். உணவுக் கலப்படத்தில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்தியாவில் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உணவுக் கலப்படம் பற்றி அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சாட்சி.

அதில் மிகமுக்கியமான கலப்படம் என்றால் அது பச்சைப் பட்டாணிதான். அதில் அதிக பச்சைநிறம் தெரிவதற்காக ரசாயனம் கலக்கிறார்கள்.

அதை வாங்கி நீரில் போட்டால் அதில் உள்ள பச்சை நிறம் அப்படியே வெளியேறுவதை பார்க்கலாம். அதேபோல மிளகில் பப்பாளி விதையை கலக்கிறார்கள். தேனில் சர்க்கரை பாகுவைக் சேர்க்கிறார்கள்.

நெய்யில் வனஸ்பதி, மற்றும் ஆயிலை கலக்கிறார்கள். இதை எல்லாம் தண்ணீரில் போட்டால் அப்படியே கண்டுபிடித்துவிட முடியும் என்கிறார்கள்.

இந்த ரசாயன சேர்க்கைதான் இருப்பதிலேயே ஆபத்தானது என்கிறார் உணவு பற்றி பல பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வரும் அக்குபஞ்சர் மருத்துவர் போப்பு.

திடக் கலப்படங்களை விட இந்தத் திரவ கலப்படம்தான் ஆபத்தானது. மஞ்சள் பொடியில் பல சாயங்களைக் கலக்கிறார்கள். மிளகாய்ப் பொடியில் சிகப்புச் சாயப் பொடிகளைக் கலக்கிறார்கள்.

பார்க்க ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்பதால் இதை செய்கிறார்கள். நம் குடலில் ஒட்டிக் கொண்டுள்ள திடக்கழிவை வெளியேற்றிவிடலாம். ஆனால் குடலுடன் ஒட்டிக் கொள்ளும் இந்தச் சாயத்தை அகற்றவே முடியாது. அது ஆபத்தானது என்கிறார் இவர்.

மேலும், 2011 முதல் 2019 வரை தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தம் 23,346 உணவுப் பொருட்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2010 முதல் 2019 வரை உணவுக் கலப்படம் குறித்து 5812 புகார்கள்தான் வந்துள்ளன.

இதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 2366 உணவுப் பொருட்கள் உண்பதற்கே உகந்தவை அல்ல என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கால இடைவெளியில் 1861 குற்ற வழக்குகளும் 4481 பொது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட குற்ற வழக்குகளில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் வரையும் பொதுவழக்குகளில் 8 கோடியே 48 லட்சம் வரையும் அபராதம் தொகைகள் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சரி, இத்தனை ஆபத்தானதாக மாறியுள்ள உணவுக்கலப்பட சந்தை பற்றிய புகார்களை யாரிடம் தெரிவிப்பது? எங்கே முறையிடுவது? இது முக்கியமானது. இதற்கு உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் மதுசூதனன் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

பொதுவாக எந்த ஒரு உணவகத்திற்குச் சென்றால் அங்கே ஒரு வாட்ஸ் அப் எண் போடப்பட்டிருக்கும். 9444042322 என்பதுதான் அந்த எண். இந்த எண்ணிற்கு எந்த ஊரில் இருந்து புகார் அளித்தால் உடனே அது பதிவாகிவிடும். அடுத்த சில மணிநேரங்களில் எங்கள் அதிகாரிகள் அங்கே இருப்பார்கள் என்கிறார் இவர்.

இன்றைக்கு அரிசில் செய்யப்படும் கல் கலப்படம் என்பது ஒரு பிரச்னை அல்ல; அதை பிரித்து நீக்கிவிடலாம். ஆனால் மூன்று நாள்கள் வரை சேமித்து வைத்த மாவில் தோசை சுடுவது அதில் சோடா உப்புகளைக் கலப்பது, சாம்பார் என்ற பெயரில் வெறும் வெண்ணீரில் பவுடரை வாங்கிக் அதை கலந்து குழம்பாக்குவது எனப் பல பயங்கரங்கள் நடக்கின்றன.

அதை அறியாமல் ஆயுளைக் காப்பாற்ற ஆயிரம் முயற்சிகளை மக்கள் மேற்கொண்டாலும் அதற்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இதை தெளிவை நுகர்வோராகிய நாம் அடிமனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்.

loading...