தலைமுடி அடர்த்தியாக வளர இயற்கையான ஷாம்பூ!... வீட்டிலேயே தயாரிக்கலாம்

Report
92Shares

இன்றைக்கு பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக இருப்பது தலைமுடி உதிர்தல் தான்.

இளவயதிலேயே வழுக்கை, நரைமுடி பிரச்சனை என மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் அதிகம்.

இதற்காக கண்ட கண்ட கெமிக்கல் ஷாம்பூக்களை வாங்கி பயன்படுத்துவதை விட நம் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு ஷாம்பூ தயாரிக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்,

  • பூந்திக் கொட்டை - 10
  • சிகைக்காய் - 1 கப்
  • நெல்லிமுள்ளி - 1 கப்
  • வெந்தயம் - 1 கப்
  • செம்பருத்தி பூக்கள் - 3

முதலில் பூந்திக் கொட்டைகளில் இருந்து கொட்டைகளை நீங்கிய பின்னர் பூந்திக் காய்களுடன் வெந்தயம், நெல்லி முல்லி மற்றும் சிகைக்காயை சேர்க்க வேண்டும்.

இவைகளை ஒரு கப் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். அதன்பின்னர் மறுநாள் காலையில் தண்ணீர் பிரவுன் நிறமாக மாறியிருக்கும்.

ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்த பின்னர் செம்பருத்தி பூக்களையும் சேர்த்து கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சவும்.

ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமிக்கலாம், இதனை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை கூட பயன்படுத்தலாம்.

3384 total views