காலையில் வெறும் வயிற்றில் தவறிக்கூட இதை சாப்பிட்டுவிடாதீங்க... ஆபத்தினை சந்திக்க நேரிடுமாம்!

Report
222Shares

தினமும் காலையில் எழுந்தவுடன், நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும் பல பொருட்களினால் நன்மை இருந்தாலும் சில பொருட்கள் நமது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தி விடுகின்றன.

  • காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரை இரண்டு டம்ளர் அருந்துவதால் உடல்எடை குறைவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, சருமம் இளமையாக காட்சியளிக்கும். மலச்சிக்கலையும் சரி செய்ய உதவுகின்றது.
  • அதுவே இளஞ்சூடான நீரில் தேன் கலந்து பருகினால், உடலுக்கு பலன் தருவதோடு சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும் செயல்படுகின்றது. ரத்தத்தைச் சுத்தம் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வயிற்று எரிச்சலையும் குறைக்கின்றது. தூக்கமின்மையை போக்கி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றது.
  • வெந்தயம் அல்லது சீரகம் ஊற வைத்த தண்ணீரை பருகினால் மிகவும் நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். குளிர்ச்சியை ஏற்படுத்தி ரத்தத்தின் சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைத்துக்கொள்கின்றன வெந்தய நீர். அஜீரணக்கோளாறை நீக்கி உடம்புக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் சீரகத் தண்ணீர்.
  • முளைகட்டிய தானியங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லதாகும். பல சத்துக்கள் அடங்கியிருக்கும் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது மட்டுமின்றி ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் இதய நோயிலிருந்து பாதுகாத்து உடல்எடையினை கட்டுப்படுத்துகின்றன. வாயுத்தொல்லை மற்றும் அலர்ஜி ஏற்படுகின்றவர்கள் இதனைத் தவிர்க்கவும்.
  • காய்கறிகளின் சாறினை பருகுவதால் உடலைச் சுத்தப்படுத்துவதுடன் ரத்தத்தையும் விருத்தியாக்குகின்றது. கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்ற காய்களை பச்சையாகவும் சாப்பிடலாம்.
  • வெறும் வயிற்றில் வாழைப்பழம், ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொள்வது தவிர்த்துவிட்டு, மற்ற பழங்களை சாறாகவும், பழமாகவும் சாப்பிடுவது சிறந்தது. இதனால் உடல் ஆரோக்கியம் ஏற்படுவது மட்டுமின்றி சருமம் பொலிவாவதுடன், உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கின்றது.

loading...