தினமும் மாதுளை சாப்பிட்டால் ஆபத்து? யார் யார் சாப்பிட கூடாது தெரியுமா?

Report
139Shares

மாதுளையின் சுவையும், மனமும் யாருக்கு தான் பிடிக்காது.

சுவையும், மனமும் இருப்பது போலவே இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும்.

ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும். இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது.

இந்த பதவில் மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

 • இது மாதுளையின் முக்கியமான பக்க விளைவுகளில் அலர்ஜியும் ஒன்றாகும்.
 • இது அரிதாக ஏற்பட்டாலும், மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. மாதுளையால் அலர்ஜிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
 • அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும்.
 • சில சந்தர்ப்பங்களில், ஒருவர் மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம், தொண்டை மற்றும் நாக்கின் வீக்கம் மற்றும் அனாபிலாக்டிக் பிரச்சினையைக் கூட அனுபவிக்கலாம்.
 • சில ஆய்வுகளில் காதுகளில் கூட வீக்கம் ஏற்படலாம், மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.
 • மாதுளை இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
 • இது உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது, ஆனால் அனைவருக்கும் இது நல்லதல்ல. ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அளவுகளில் கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்கள் மாதுளம்பழங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
 • அறுவை சிகிச்சையின் போது மாதுளை சிக்கல்களை ஏற்படுத்த இதுவே காரணமாகும்.
 • நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
 • கர்ப்ப காலத்தில் பெண்கள் முதலில் தேடுவது மாதுளையைதான்.
 • மாதுளம் பழம் சாப்பிடுவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க சிறந்த வழி மாதுளை சாப்பிடுவதுதான், ஆனால் நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.
 • நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் மாதுளையை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது.
 • கலோரிகள் அதிகமுள்ள இதனை எடுத்துக்கொள்ளும் போது இது எடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

loading...