சர்க்கரை நோயாளிகள் தினமும் எத்தனை பாதாம் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடுவது நல்லது?

Report
54Shares

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நட்ஸாக இருக்கும். அதில் ஒன்று தான் பாதாம்.

பாதாமில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஒவ்வொருவரது டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப் பொருளாகும்.

ஆனால் இந்த அற்புதமான பாதாம் சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுவதோடு, சர்க்கரை நோயை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.

பாதாமை எப்போது சாப்பிடுவது நல்லது?

பாதாமை சர்க்கரை நோயாளிகள் அதிகாலை அல்லது மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

பாதாம் உடல் எடையை அதிகரிக்காதா?

பாதாமில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் டயட்டில் பாதாமை சேர்ப்பதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்.

இதனால் உடல் பருமனாவதைத் தடுக்கலாம். ஒரு சர்க்கரை நோயாளி சாதாரண அளவு கலோரிகளை எடுத்து வந்து, பாதாமையும் அன்றாடம் உட்கொண்டால், அது அவர்களது மொத்த கலோரியின் அளவை அதிகமாக காட்டும்.

எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க பாதாமை உட்கொள்வதாக இருந்தால், மற்ற கலோரி நிறைந்த உணவுகளை உண்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

எத்தனை பாதாம் சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் கலோரியில் கட்டுப்பாட்டுடன் இருந்து, பாதாமை உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் இன்னும் அதிகமாக சாப்பிடலாம். ஆனால் பொதுவாக ஒருவரால் ஒட்டுமொத்த கலோரியின் அளவைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே ஒரு நாளைக்கு 6-8 பாதாம் சாப்பிடுவதே பாதுகாப்பானது என்று ருச்சிகா கூறுகிறார்.

3020 total views