வெண்புள்ளிகள் மறைய இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்.. பலனளிக்கும் தகவல்..!

Report
172Shares

வெண்புள்ளிகள் என்பது உடல் அமைப்பு சார்ந்த நோய் நோய் எதிர்ப்பு ஆற்றலின் தடுமாற்றத்தால், தவறுகளால் உருவாகும் விளைவு ஆகும். இப்பதிவில் வெண்புள்ளிகளை தடுப்பதைப் பற்றி பார்ப்போம்.

நமது உடலில் வைட்டமின் பி, ஹீமோகுளோபின், ரத்தம் இவை போதுமான அளவில் இல்லாதபோது இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய் எந்த வயதினரையும் தாக்கலாம். இந்த நோய் குணமாவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. குணமாவது நோயாளியின் வயது, நோயின் தீவிரம், உடல்நிலை மாறுபாடு, மனஅழுத்தம் என்ற பல அம்சங்களை சார்ந்தது.

உணவு மூலம் கட்டுப்படுத்தும் முறைகள்

  • கொய்யா, ஆரஞ்சு பழங்கள் உண்ணுவதை முற்றிலும் குறைக்க வேண்டும். மேலும் ஸ்வீட் லைம், கருப்பு திராட்சை, பச்சை வாழைப்பழம், முள்ளங்கி, பூசணிக்காய், மீன், கோழிக்கறி, முட்டை, உளுத்தம் பருப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள், புளி இவைகளை முடிந்த அளவிற்கு நமது உணவு பட்டியலில் இருந்து குறைக்க வேண்டும்.
  • வெங்காயம், தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வேகவைத்து உணவில் சேர்க்க வேண்டும். செவ்வாழை, மாதுளம்பழம், பப்பாளி, பொன்னாங்கன்னி கீரை, வெந்தயம், சுரைக்காய், கருப்பு மூக்கடலை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், வெண்புள்ளி ஒரு தொழுநோய் அல்ல, இது தொடர் சிகிச்சையின் மூலம் குணமாகும் தன்மையுடையது. பரம்பரை நோயும் அல்ல, நூற்றில் ஒருவருக்கு தான் இந்த நோயின் பாதிப்பு இருக்கும். ஆயுர்வேதத்தின் மூலமும் இந்த நோயை குணப்படுத்தலாம்.

6377 total views
loading...