உயிரையும் பறிக்கும் மாதுளை... இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் வேண்டாம்!

Report
448Shares

உலகில் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் மாதுளை பழம். இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும், சத்துக்களும் அடங்கியிருப்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் இதில் சில ஆபத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறப்படுகின்றது. மாதுளையினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் காணலாம்.

அலர்ஜிகள்

அலர்ஜி என்பது மாதுளையினால் வரும் முக்கியமான பக்கவிளைவுகள் ஆகும். மிக அரிதாக ஏற்படும் இந்த மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியதாம். இதனை மருத்துவரிடம் உடனே காட்ட வேண்டுமாம். மாதுளை சாப்பிட்ட 10 நிமிடங்களில் இந்த அரிப்பு மற்றும் அறிகுறிகள் தோன்றினால் கட்டாயம் மருத்துவரை அனுகவும்.

  • அரிப்பு
  • வீக்கம்
  • தொண்டையில் எரிச்சல்
  • வயிற்று வலி
  • படை நோய்
  • மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் (சில தருணங்களில்)
  • தொண்டை மற்றும் நாக்கின் வீக்கம்
  • காதுகளில் வீக்கம்

அலர்ஜிக்கு என்ன செய்ய வேண்டும்?

மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த இடத்தை தேய்க்கவோ அல்லது சொறியவோ வேண்டாம். அதேபோல அந்த இடத்தில் சோப்பு அல்லது தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம், ஏனெனில் இது அலர்ஜியை தீவிரப்படுத்தும். அதன்மீது களிம்புகளை பூசி அதன் ஈரப்பதத்தை எப்போதும் தக்கவைத்துக் கொள்ளவும். சருமத்திற்கு ஏற்றவாறு நெகிழ்வான ஆடைகளை அணியவும்.

loading...