ஞாபகசக்தி குறைபாடு உங்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறாதா?.. இந்த நோயாகவும் இருக்கலாம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்!

Report
237Shares

பொதுவாக குழந்தைகளின் ஞாபக சக்திக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது, மூளை நரம்புகளானது வயது முதிர்ச்சியாலும், போதிய ஊட்டச்சத்து நமக்கு கிடைக்காததாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே இதற்கு காரணம்.

இதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடும் நிலை ஏற்படுகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள தக்காளி, காரட், திராட்சை, வெண்டைக்காய், ஆரஞ்சு, முட்டை, வல்லாரைகீரை, செர்ரி, பால், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும்.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக உள்ளது. பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ‘டி’ உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது, நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயற்பட வைக்கிறது.

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களில் முக்கியமானது தான் ‘கோலைன்’ சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ‘டி’ அறிவுத்திறனை அதிகரிக்கும்.

வைட்டமின் ”பி” மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசளைக் கீரை, பீட்ரூட் போன்றவற்றை உண்பதால் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

loading...