பானை போன்று வீங்கியுள்ள வயிறு உடனே மெல்லிடையாக வேண்டுமா? இத படிங்க

Report
494Shares

பொதுவாக வயிற்றில் கெட்ட கொழுப்புக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும்.

அதிலும் உங்கள் வயிறு பானை போன்று வீங்கி காணப்பட்டால், இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

உடனே மெல்லிடை வேண்டும் என்றால் இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் முளைக்கட்டிய கொள்ளு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் புதினா
  • சாட் மசாலா 1/2 டீஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன்

மேமே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பசிக்கும் நேரத்தில் உட்கொண்டு வர, பசியும் அடங்கும், கொழுப்புக்கள் கரைந்து தொப்பையும் குறையும். ஒரே மாதத்தில் மெல்லிடையை பெற்று விடலாம்.

எலுமிச்சை மற்றும் புதினா பானமும் உடல் எடையை விரைவில் குறைக்கும்

2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும்.

இதனால் குறைவான அளவில் உணவை உட்கொள்ளலாம், செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து தொப்பையும் குறையும்.

loading...