வாழ்நாளில் இதனுடன் மட்டும் கீரையை சேர்த்து சாப்பிடாதீங்க... பெரிய ஆபத்தாம்!

Report
619Shares

பல சத்துக்கள் அடங்கிய கீரைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நன்மையே.. வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அதிகமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்தசோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வு தருகின்றது என்பது நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

கீரைகளை வாங்கிய பின் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.

  • கீரைகளை நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வேக வைத்திருக்க வேண்டும். கீரைகளை வேகவைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.
  • மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
  • கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்சினைகளையும் உருவாக்கும்.

You May Like This