காலையில் வெறும் வயிற்றில் ஓம நீர் குடிக்கலாமா? தினமும் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Report
160Shares

நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். ஓமமானது பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.

ஓமத்தை நீரில் ஊற வைத்து அந்நீரை தினமும் குடித்தும் வரலாம். இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

ஓம நீர் தயாரிப்பது எப்படி?

  • 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம்.

நன்மைகள்

  1. வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  2. ஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.
  3. சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் தான் இது.
  4. அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.