சிறுநீரக கற்களால் உயிரை பறிக்கும் அளவிற்கு வலியா?... இதோ நிரந்தர தீர்வு...

Report
296Shares

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரக பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது.

சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது.

முதலில் முதுகில் வலியை ஏற்படுத்தி அடிவயிறு, அந்தரங்க பகுதி என காய்ச்சலில் கொண்டு வந்துவிடும், தொடர்ந்து சிறுநீரில் ரத்தம் வெளியேறும், எனவே ஆரம்பத்திலேயே அறிகுறிகள் தென்படும் போது முறையான பரிசோதனைகள் மூலம் கண்டறிவது அவசியம்.

உடனடி வைத்திய முறை
 • எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
 • ஆலிவ் எண்ணெய்- 1 டீஸ்பூன்
 • நீர் கிளாஸ்- 1

எலுமிச்சை சாறையும், ஆலிவ் எண்ணெயையும் ஒன்றாக கலந்து கொண்டு குடித்து விடவும், இதன் பின் ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்தவும், ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்துவந்தால் கற்கள் வெளியேறி விடும்.

வீட்டு வைத்தியம்

 • தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
 • பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
 • அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
 • வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.
 • வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
 • பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
 • கொதிக்கும் நீரில், சோள நாரை போட்டு கொதிக்க விட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடிக்கலாம், சிறுநீரகத்தில் இருக்கும் வலியையும் சரிசெய்துவிடும்.
 • மாதுளை சாறை தினமும் குடித்து வந்தாலும் சிறுநீரக கற்கள் கரையும்.

காரட், பாகற்காய், இளநீர்:

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட், பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை:

இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்:

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்:

கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

சாப்பிடக்கூடாதவை:
 • உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
 • கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமானவர் சிறுநீரகம் குறித்து அனுசரிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
சரியான உடல்எடை மற்றும் சுறுசுறுப்பு

முறையான உடற்பயிற்சியும் அன்றாடம் உடல் உழைப்புமிக்க வேலைகளும் செய்தால் இரத்த அழுத்தம் சரியான நிலையில் வைக்கப்படும். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு எல்லைக்குள் இருக்கும்.

சரிவிகித உணவு.

ஆரோக்கியமான உணவையே சாப்பிட்டு வாருங்கள். உணவில் புதிய பச்சை பசேலென்ற காய்களும், பழங்களும் சேர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் மாமிசம் கலந்த உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். 40 வயதிற்கு மேல் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தம் மிகாமல் பாதுகாக்கவும், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் உதவும்.

உடல் எடையில் கவனம்

உடல் எடையை, சமச் சீரான உணவு மூலமும், உடற்பயிற்சி மூலமும் சரிவரப் பாதுகாத்து வாருங்கள். இது நீரிழிவு நோய், இருதய நோய், சிறுநீரக நோய் ஆகியவை வராமல் தடுக்கிறது.

புகைப்ப்பிடித்தல் மற்றும் புகையிலை தவிர்க்கவும்

சிகரெட் புகைப்பது, Atherosclerosis எனும் நோயைக் கொண்டு வரும். இது சிறுநீரகங்களுக்குப் போகும் இரத்தத்தைக் குறைக்கிறது. ஆகவே சிறுநீரகங்கள் திறன் மிக்கநிலையில் வேலை செய்யமுடியாது.

வலி நிவாரணி மாத்திரை

வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் மிக விரைவில் சிறுநீரகங்கப் பாதிப்பு ஏற்படும். அவ்வாறு தேவைப்பட்டாலும் அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனைப் படி குறைவாக எடுத்துக்கொள்ளவும்.

குடிநீர்

ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் நீராவது பருகுங்கள். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை நீக்கி சிறுநீரக நோய்களை வராமல் தடுக்கலாம்.

வருடத்திற்கு ஒரு முறை சிறுநீரக சோதனை

சிறுநீரக நோய்கள் பெரும்பாலும் பொறுமையாக பாதித்துக் கொல்லும் குணமுடையவை. மிக மோசமான நிலைக்கு முற்றும்வரை இந்த நோய்கள் எந்தவித அறிகுறிகளையும் காட்டுவதில்லை. சிறுநீரகங்களை அவ்வப்போது முறையாக சோதித்து அறிய வேண்டும். ஆனால் பெரும்பாலும் இந்த வழிமுறை உதாசீனப்படுத்தவே படுகிறது.

நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு அல்லது உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அல்லது குடும்பத்தில் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். அதுவும் 40 வயதிற்கு மேல் அவசியம் இந்தச் சோதனைகளை மேற்கொள்ளவும். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் இரத்த அழுத்தம், சிறுநீர் மற்றும் இரத்தத்தில் உள்ள கிரியேட்டினைனின் அளவு ஆகியவற்றை சோதித்துக் கொள்ளவும்.

9747 total views