வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்களை நெருங்கும் மோசமான விளைவுகள் என்ன தெரியுமா?

Report
85Shares

காலையில் எழுந்ததும் உலகத்தில் அதிக நபர்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பொருள் என்றால் அது காபிதான்.

காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு நாளைக்கு கணக்கில்லமால் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும்.

பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.

காலை நேரத்தில் காபி மட்டும் குடிக்காதீர்கள்

  • இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒன்றாகும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
  • காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கி மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல.
  • காலை உணவிரு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.
  • உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது.
  • இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.
  • இது உங்களை மிகவும் சோர்வாக உணரவைக்கும். எனவே காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.

4479 total views
loading...