இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீசுங்கள்! இல்லை என்றால் கொடிய ஆபத்தை அழைத்துவரும்?

Report
1306Shares

நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் நமது ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அந்த பொருட்களை முடிந்தளவு வீட்டில் இருந்து தூக்கி எரிந்து விடுவது நல்லது. அப்படி இல்லை என்றால், உங்களுக்கு தினமும் ஆபத்துதான்.

பழைய கேக்

கடைகளில் விற்கும் கேக் கலவைகள் சில சந்தர்பங்களில் உங்களுக்கு ஆபத்தானதாக மாறிவிட வாய்ப்புள்ளது.

இதன் மேற்பரப்பானது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

இது அலர்ஜி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது காலாவதி தேதியை கடந்து விட்டால் உடனடியாக தூக்கி எறிந்து விடுவது நல்லது.

காய்ந்த மலர்கள்

உங்கள் வீட்டில் காய்ந்த மலர்கள் இருப்பது உங்களுக்கு ஆபத்தானதாகும். முதலில் காய்ந்த மலர்கள் ஆபத்தை ஏற்படுத்துவதாகும், அடுத்து அவரை வைத்திருக்கும் பொருட்கள் ஆபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் காய்ந்த மலர்களை கண்டிப்பாக வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவை செல்லப்பிராணிகளுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பழைய மசாலாக்கள்

மசாலா பொருட்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல.

இறக்குமதி செய்யப்பட்ட மசாலா பொருட்களில் இருமடங்கு சால்மோனெல்லா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

மல்லி, துளசி, எள், மிளகு போன்றவற்றில் எளிதில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்ளும். எனவே முடிந்தளவு இவற்றை நீண்ட காலம் பயன்படுத்தாதீர்கள்.

பிளாஸ்டிக் டப்பாக்கள்

பிளாஸ்டிக் டப்பாக்கள் உணவுகளையும், பொருட்களையும் சேமித்துவைக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் அனைத்துவகை பிளாஸ்டிக் டப்பாக்களிலும் பிஸ்பெனால் ஏ என்னும் நச்சுப்பொருள் உள்ளது.

குறைந்த அளவில் இருந்தாலும் இவை மூளை மற்றும் ஹார்மோன் மீது குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

பழைய ஷூ

பழைய ஷூக்களின் வாசனை மட்டும் அவற்றை தூக்கியெறிய காரணம் அல்ல. ஆனால் பழைய ஷூக்கள் உங்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். பழைய ஷூக்கள் நீங்கள் அணியும்போது நடப்பது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் பல காயங்களும் ஏற்படும்.

you may like this video


37232 total views