டயட் இருக்கும்போது நீங்க செய்யும் மிகவும் ஆபத்தான விடயங்கள் என்ன தெரியுமா? இவ்வளவு இருக்கா...!

Report
126Shares

எடை குறைப்பு முயற்சிக்காக பின்பற்றப்பட வேண்டிய வழிகள் இன்று பலவிதமாக உள்ளன.

நம்மில் பலரும் இவற்றுள் நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய வழிகளை முயற்சித்து எடை குறைய ஆசைப்படுகிறோம்.

ஆனால் இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் உள்ளன. இந்த பதிவில் இன்றைய நாட்களில் பொதுவாக பலராலும் பின்பற்றக்கூடிய சில டயட் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றிற்கான பாதிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வித டயட் முறைகளைத் தவிர்ப்பது நல்லது.

தேநீர் டயட்

குறிப்பாக மூலிகைத் தேநீர் பருகுவதால் எடை குறைப்பு சாத்தியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் இவை மூலிகைத் தேநீராக இருக்கும் பட்சத்தில் நன்மை விளைவிப்பதாக உள்ளது.

எனவே, மூலிகை தேநீர் பருகும்முன், அதன் மூலப்பொருள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பருகுவது நல்லது.

உடலின் கழிவுகளை அகற்ற பின்பற்றப்படும் தேநீர் டயட்டில் குறிப்பிடும் தேநீர் வகைகளில் நிலவாகை இல்லை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இலை மலமிளக்கியாக செயல் புரிவதில் சிறப்பு பெற்ற ஒரு இலை ஆகும். எனவே அடிக்கடி மலம் கழிக்கும் நிலை உருவாகும். அதோடு மட்டுமில்லாமல், உடலின் நீர்ச்சத்து குறையும் போது, எலக்ட்ரோலைட்டுகளையும் சேர்த்து இழக்க நேரிடலாம். இதனால் தசை பிடிப்பு, மாரடைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

பிரபலங்கள் பின்பற்றும் நச்சு வெளியேற்ற வழிகள்

பல பிரபலங்கள் எடை குறைப்பு செய்வதற்காக சில குறிப்பிட்ட முறையை பின்பற்றியதாக நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.

தண்ணீர் மட்டும் பருகுவது, மேப்பிள் சாறு பருகுவது, சிவப்பு மிளகாய் துகள்கள் உட்கொள்வது, எலுமிச்சை சாறு மட்டும் பருகுவது என்று ஒரு அட்டவனையை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம்.

ஆனால் இதே முறையைப் பின்பற்றுவதால் நீங்களும் அந்த பிரபலம் போல் மாறி விட முடியாது.

இதனைப் பொதுவாக ஜீரோ கலோரி முறை டயட் என்றும் குறிப்பிடுவர். இதனால் உங்கள் உடல் எடை குறையலாம் ஆனால் உங்கள் உடலின் ஆற்றலும் குறைய நேரிடும்.

வாந்தி எடுப்பது என்ற ஒன்றைத் தவிர வேறு எதைச் செய்யவும் உங்கள் உடலால் முடியாது.

இடைவிட்ட விரதம்

இந்த வகை இடைவிட்ட டயட் முறை பலவித ஆரோக்கிய நன்மைகள் கொண்டது என்று சில ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது நிச்சயம் நமக்கு பாதுகாப்பானது என்று கூற முடியாது.

குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், குமட்டல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தொடர்ச்சியாக இந்த டயட் முறையைப் பின்பற்றுவதால், எடை அதிகரிப்பு ஏற்படலாம். காலப்போக்கில் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கலாம்.

கேடோஜெனிக் டயட்

உலகளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஒரு டயட், முறை கேடோஜெனிக் டயட் என்னும் கேட்டோ டயட் ஆகும். இந்த வகை டயட், அதிக கொழுப்பு, குறைந்த கார்போ சத்து என்ற குறிக்கோளைக் கொண்டது.

உடல் தனக்கு தேவையான ஆற்றலை கார்போ ஹைட்ரேட்டில் இருந்து எடுக்காமல், கொழுப்பை எரித்து பெற்றுக் கொள்ளும் முறையாகும். இந்த் வகை டயட்டுகள் சில, உங்கள் உடலில் 10% கலோரிகளை மட்டுமே குறைக்க உதவுகின்றன.

அதே நேரத்தில், மருந்துகளால் குணப்படுத்த முடியாத வலிப்பு போன்ற கோளாறுகளுக்கு கேட்டோ டயட் உதவுவதாகவும் அறியப்படுகிறது.

ஒரு தீவிர உணவு, மூளை வேதியியலை பாதிக்கக்கூடும் என்றால், அது உங்களுக்கு மிகவும் தீவிரமாக இருக்கலாம்.

4063 total views