கருப்பு மிளகை இந்த நேரத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க? கரையாத தொப்பையும் கிடுகிடுனு கரைஞ்சிடும்...!

Report
286Shares

கருப்பு மிளகு என்பது தென்னிந்திய உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு காரசாரமான மசாலா பொருளாகும்.

இந்த கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது.

இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கோம். ஆனால் இந்த கருப்பு மிளகை கொண்டு நம் எடையை கூட குறைக்க முடியுமாம்.

எடை குறைப்பு

இந்த கருப்பு மிளகை சில வகைகளில் உணவுடன் கலந்து கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நாள் கரைக்க முடியாமல் கஷ்டப்பட்ட தொப்பையும் கரைந்து போய்விடும்.

கருப்பு மிளகு டீ

  • கருப்பு மிளகு டீ உங்கள் எடையை குறைக்க சிறந்த ஒன்று. இதை நீங்கள் எளிதாகவும் தயாரிக்கலாம்.
  • இஞ்சி, லெமன், துளசி, க்ரீன் டீ பேக்குகள் அல்லது பட்டை மற்றும் 1/2 - 1 டீ ஸ்பூன் கருப்பு மிளகு பொடி சேர்த்து டீ தயாரிக்கவும்.
  • இதை காலையில் சாப்பிடுவதற்கு முன் செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்.

எடுத்துக் கொள்ளும் அளவு

தினமும் 1-2 டீ ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து கொண்டு வந்தால் எடை குறையும். நீங்கள் இதுவரை இஎடுத்துக் கொண்டது இல்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரித்து கொள்ளுங்கள். அதிகமான மிளகு சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகள், கண்களில் எரிச்சல், வயிறு எரிச்சல், மூச்சுப் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

சாப்பிட வேண்டிய நேரம்

காலையில் உணவருந்துவதற்கு முன் மிளகு அல்லது மிளகு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். இதை வெறுமனே மென்றோ, ஜூஸ், சூப் போன்றவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.

8946 total views