மொச்சைக்கொட்டை சாப்பிடுவது உங்களை எத்தனை ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாத்தும் தெரியுமா?

Report
142Shares

உணவுகளில் பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்று மொச்சைக்கொட்டையாகும்.

பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இதை பற்றி நாம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.

சோயா வகையை சேர்ந்த ஒன்றாக கருதப்படும் இது ஜப்பானில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த நோய்களில் இருந்து மொச்சைக்கொட்டை உங்களை பாதுகாக்கிறது என்று பார்க்கலாம்.

சரும ஆரோக்கியம்

சருமம் சிதைவுற பல காரணங்கள் உள்ளது. இந்த சூழ்நிலையில் மொச்சைக்கொட்டையில் இருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், சிதைந்த சருமத்தை சரி செய்யவும் உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆஸிடண்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராட வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் அவசியமானதாகும்.

வலிமையான எலும்புகள்

எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ என அனைத்தும் இதில் உள்ளது. இதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமைப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எடை பராமரிப்பு

155 கிராம் மொச்சைக்கொட்டையில் 18.5 கிராம் புரோட்டின் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது. எடையை பராமரிப்பதில் ஆரோக்கிய உணவுகள் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதிக புரோட்டின்களும், குறைந்தளவு கலோரிகளும் இருக்கும் உணவுகள் எடையை சீராக பராமரிக்க உதவும். அதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

செரிமானம்

இது செரிமான மண்டலத்தை சீராக வைத்து கொள்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலும், வீக்கமும் ஏற்பட முக்கிய காரணம் இதனை குறைவாக எடுத்துக்கொள்வதாக கூட இருக்கலாம்.

செரிமானம் மட்டுமின்றி இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இது நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

4177 total views