தினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா?

Report
318Shares

தினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்.

ஆனால் இந்த சருமத்தின் தன்மை அடிக்கடி மாறுபட்டு கொண்டே இருக்கும். எனவே இப்படி மாறும் சருமத்தை கவனமாக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம்.

அதற்கு தான் இந்த பாத் உப்பு பயன்படுகிறது. ஆமாங்க இந்த பாத் உப்பை பயன்படுத்தி வருவதால் சருமத்திற்கு என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

வீட்டிலேயே தயாரித்தல்

இந்த பாத் உப்பை தேடி நீங்கள் அழகு நிலையங்களில் அலைய வேண்டாம். இதை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது மிகவும் எளிது.

குளியல் உப்பு

குளியல் உப்பு என்பது கடலிருந்து பெறப்படும் இயற்கையான உப்பாகும். இதில் நிறைய விட்டமின்கள் தாதுக்கள் என்று சருமத்திற்கு நிறைய நன்மைகளை கொடுக்க கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளது.

இது ஒரு தண்ணீரில் கரையக் கூடிய படிகப் பொருள்.இந்த உப்பை நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த உப்புக் குளியல் தசைகளை தளர்ச்சியாக்கி மூட்டுகளை வலிமையாக்குகிறது.

பயன்கள்

பொலிவான சருமம் தினமு‌ம் குளிக்கும் போது இந்த உப்பை பயன்படுத்தி வந்தால் பொலிவான சருமம் கிடைக்கும். இதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ப்ரோமைடு, சோடியம் போன்ற பொருட்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாக வும் வைக்க உதவுகிறது.

இளமையான சருமம்

இந்த குளியல் உப்பை கொண்டு நீங்கள் சீக்கிரம் வயதாகுவதை தள்ளிப் போடலாம். இது வயதாகுவதை மெதுவாக்குகிறது. இந்த குளியல் உப்பை பயன்படுத்தி வரும் போது சரும துளைகளை குறைத்து சரும கோடுகள், சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தருகிறது.

கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்

  1. அதிகமாக குளியல் உப்பை பயன்படுத்தாதீர்கள். இது சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். குளியல் உப்பு நிறைய நிறங்களில் கிடைக்கிறது.
  2. உங்களுக்கு தேவையான நிறத்தில் மார்க்கெட்டில் தரம் பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
  3. திறந்த காயங்கள், புண்கள் இருந்தால் பாத் உப்பை பயன்படுத்தாதீர்கள் ஷேவிங் செய்யும் போது குளியல் உப்பை பயன்படுத்தி குளிக்காதீர்கள்.
  4. குளியல் உப்பை தண்ணி படாத இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள்.

12345 total views