எல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க! எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்

Report
521Shares

சௌசௌ என்பது நமக்கு தெரிந்த ஒரு காய் தான். இந்த சௌசௌ காயை பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவர். ஒரு பக்கம் ஓவல் வடிவத்திலும் மறுபக்கம் சற்று உருண்டை வடிவத்திலும் இருக்கும். இதன் தோல் பகுதி வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.

நல்ல அடர் பச்சை நிறத்தில் இதன் தோல் மாறும்போது இந்த காய் அறுவடைக்கு தயாராக இருக்கும் என்பது பொருள்.

அந்த காய் நம்முடைய உடலில் பல அற்புதங்களைச் செய்யக்கூடியது என்பதே நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்டது.

மண்ணில் அதிக ஈரம் மற்றும் ஈரப்பதமான வெப்பநிலை இந்த காய் வளர்வதற்கு ஏற்ற நிலையாகும். பூ வந்தவுடன் அடுத்த 30 நாட்களில் இந்த காய் அறுவடைக்கு ஏற்ற நிலைக்கு வளர்ச்சியை எட்டுகிறது.

ஒரே பருவத்தில் ஒரு செடி 150 காய்களை தருகிறது. இதன் அறிவியல் பெயர் சிகியம் ஏட்யுள் ஆகும். ஒரு வகை சௌசௌ தண்டுகளைக் கூட உட்கொள்ள முடியும்.

இந்தோனேசிய உணவுகளில் இந்த சௌசௌ ஒரு பெரிய மூலப்பொருளாக பார்க்கப்படுவதன் காரணம் இதன் சுவை ஆகும்.

இந்த சௌசௌவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சமைத்தவுடன் மிகவும் மென்மையாக சுவையாக மாறுகிறது. இதன் தோல் பகுதி மற்றும் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு இதனை சமைக்கலாம்.

பயன்கள்

பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட சௌசௌ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் நபர், சௌசௌ கூழ் எடுத்துக் கொள்வதால் அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு கூடுதல் ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்கும் ஒரு காய் இந்த சௌசௌ. இது ஹைபர் டென்ஷனை குறைக்கிறது. ஆரோக்கியமான உணவு பட்டியலில் இதனை தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் நேரத்தில், தினமும் காலை உணவிற்கு முன் இந்த காயை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் உங்கள் டயட் சீராக இருக்க இந்த காய் உதவுகிறது.

கொழுப்பை கரைக்க

சௌசௌ உள்ள ஊட்டச்சத்து கூறுகள், உடலில் உள்ள கொழுப்பை திறமையான முறையில் எரிக்க உதவுகிறது. வேக வைத்த சௌசௌ கஞ்சியை உங்கள் உணவில் சேர்த்து, அரிசியை தவிர்க்கலாம்.

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. பொரித்த உணவால் கொழுப்பு அதிகரிக்கும். எடை குறைப்பிற்கு சௌசௌ சேர்த்துக் கொள்வதுடன் பயிற்சிகளும் மேற்கொள்வதால் எளிதில் பலன் கிடைக்கும்.

கொலஸ்ட்ரால்

உடலில் கொழுப்பு அளவு குறைவதுடன், சௌசௌ உட்கொள்வதால், உடலின் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது சௌசௌ உட்கொள்வதால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

எப்படி சாப்பிடுவது?

சௌசௌவை சமைத்த பின் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இதனை சாலடில் பயன்படுத்துவார்கள்.

இந்தோனேசியாவில் இதனை ஒசெங் ஒசெங், வெஜிடபிள் அமிலம், மனடோ போரிட்ஜ் போன்ற பல்வேறு உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்துவார்கள்.

இதனை ஜூஸில் கூட சேர்த்து அருந்துவார்கள். இதனை சமைப்பதற்கு முன், இதன் தோலை நீக்கி விட வேண்டும்.

பிறகு சௌசௌ கழுவி சுத்தம் செய்து பின் பயன்படுத்த வேண்டும். சௌசௌவை இரண்டு பாதியாக நறுக்கி, ஒன்றோடு மற்றொன்றை தேய்ப்பதால் அதன் கொட்டை விலகி விடும்.

அதன் கொட்டையை முழுவதும் நீக்கிய பிறகு மறுமுறை கழுவிவிட்டு பின் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின் அதை வேகவைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்து குடிக்கலாம்.

23465 total views