பெண்கள் மாதவிடாய் காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

Report
164Shares

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு இயல்பாகவே வயிறுவலி, முதுகுவலி, மூட் ஸ்விங், மன அழுத்தம், மன சோர்வு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் ஏற்படும். இருக்கின்ற வலியில் தேவையில்லாமல் உணவின் மூலம் இன்னும் வலிகளை ஏன் சுமப்பானேன்? அதனால், மாத்ததின் ஐந்து நாட்கள் இந்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள், அல்லது குறைத்து விடுங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பீட்சா, பர்கர் போன்ற உணவுகளின் பன், பேட்டிகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டவையாக தான் இருக்கும். நமது உடல் இந்த நேரத்தில் கூடுதலாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது உடலுக்கு ஒட்டாத கெமிக்கல் கலந்த உணவுகளைத் தருவதன் மூலம் மேலும் உடல்நிலை மோசமாகும்.

மாதவிடாயின் பொது ஏற்படும் ரத்தப்போக்கால் உடல் கனமாக இருப்பதுபோல தோன்றும். அப்போது இந்தவகை உணவுகளை உண்பதால், குறிப்பாக துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் மோனோ சோடியம் உப்பு, உடலை மேலும் ஹெவியாக்குகின்றன. அதனால், இப்படிப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிடவும்.

காஃபி: பி.எம்.எஸ் என்று சொல்லப்படும் ப்ரீ மென்ஷுரல் சிண்ட்ரோம். அதாவது மாதவிடாய் வருவதற்கு முன்பு இருக்கும் மனநிலையை இப்படிக் கூறுவார்கள். அப்போது, மிகவும் சோர்வாகவும், மனநிலை ஒரு வித எரிச்சல்தன்மையிலும் இருக்கும். அந்த நேரத்தில் காஃபி குடிக்கும்போது அதில் இருக்கும் கஃபைன், ரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதயத்துடிப்பையும் அதிகரிக்கிறது. இது இன்னும் உங்களை எரிச்சலைடைய செய்யும்.

பால் பொருட்கள்:

சில ஆய்வுகளில் பால் பொருட்கள் உண்பதன் மூலம் க்ராம்ஸ் அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பால் பொருட்களில் இருக்கும் அரசிடோனிக் அமிலங்களால் இது ஏற்படுகிறது என்கிறார்கள். அதனால் கூடுமானவரை பால் பொருட்களை தவிர்த்திடுங்கள்.

பொறித்த உணவுகள்:

அதிக கொழுப்புள்ள உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகளால் ஈஸ்ரொஜன் அளவு தூண்டப்படுகிறது. இதனால் ரத்தப்போக்கு அதிகமாகலாம். அதிக உப்பையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

அதிக உணவும் வேண்டாம்:

மாதவிடாயின் போது எப்படி கம்மியாக உண்ணக்கூடாதோ அதேபோல அளவுக்கு அதிகமாக உண்பதும் வேண்டாமே. அளவுக்கு மீறி உணவு உண்பதால், வயிறு விரிவடைகிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே மாதவிடாய் ரத்தப்போக்கும் சேர்ந்து செரிமானக் கோளாறை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். இதனால் பசித்து சாப்பிட்டவுடன், ஏதேனும் சாப்பிடத்தோன்றினால் ஒரு அரைமணிநேரம் விடுங்கள். அதன்பின்னும் சாப்பிடவேண்டும் என்று தோன்றினால் சாப்பிடுங்கள். ஒரேமூச்சில் மொத்தமாக சாப்பிட்டு உடலுக்கு அழுத்தம் தரவேண்டாம்.

என்ன சாப்பிடலாம்:

டார்க் சாக்லேட், ஃப்ரெஷ் ஜூஸ், பழங்கள், கீரை வகைகள்,நட்ஸ் வகைகள், நார்சத்து உள்ள காய்கறிகள். உணவை நான்கு வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிடுங்கள். சமையலுக்கு குறைந்த உப்பை பயன்படுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்

6856 total views