3பேரிச்சம் பழத்தினை தேனில் ஊர வைத்து 3 நாட்கள் கழித்து சாப்பிடுங்கள்! என்ன நடக்கும் தெரியுமா?

Report
348Shares

பேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அத்தகைய பேரிச்சம் பழத்தை மருத்துவ குணம் நிறைந்த தேனுடன் கலந்து சாப்பிட்டால், எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

செய்முறை

ஒரு கண்ணாடி பாட்டிலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, பேரிச்சம் பழம் மூழ்கும் அளவு தேன் ஊற்றி மூடி வைத்து, 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முறை

தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலையில் என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.

நன்மைகள்

  1. இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்.
  2. பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இந்த பேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  3. மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக இதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.
  4. அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
  5. இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இதில் உள்ள பீட்டா-டி-க்ளூக்கான், உடலின் கொலஸ்ட்ரால் உறிஞ்சும் அளவு குறைந்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையால் இதய நோய் வருவது தடுக்கப்படும்.

loading...