குடிநீரை இயற்கை முறையிலேயே ஈஸியாக சுத்தகரிக்கலாம்.. எப்படி தெரியுமா..?

Report
294Shares

நவீன உலகில் தண்ணீரை சுத்தகரிப்பதற்கு பியூரிப்பையர்கள் பல வந்தாலும் இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை இன்று வரை எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில், தற்போது இயற்கையான முறையில் தண்ணீரை சுத்தகரிக்கும் சில பொருட்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மண்பாண்டம்

நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.

வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்

தேத்தான் கொட்டை:

நீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை. தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்.

முருங்கை விதை:

தேத்தான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத் தோல்:

வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

துளசி:

துளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.

சப்ஜா விதை

பலருக்கும் 'சப்ஜா விதைகள்' என்று சொன்னால் தெரியாது. இந்த விதைகளை சிலர் 'துளசி விதைகள்' அல்லது 'கருப்பு கசகசா' என்றும் அழைப்பார்கள்.

இந்த விதைகளால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், பல வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும்.

சப்ஜா விதை மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

10205 total views