உடலில் அதிகமாக அழுக்கு சேரும் இடங்கள் எது தெரியுமா? மிகவும் அழகாய் இருக்கும் இந்த இடத்திலுமா? தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க

Report
256Shares

நாம் எண்ணுவதை விட, நமது சில உடல் பாகங்களில் நிறைய பாக்டீரியாக்கள் தேங்கியும், தங்கியும் இருக்கின்றன.

நமது உடலிலேயே மிகவும் அழகாக தெரியும் முகத்தில் தான் அதிகமாக அழுக்கும் சேருமாம். நாம் பயன்படுத்தும் மொபைல் மூலமாக கூட நிறைய நச்சுகள் நமது முகத்தில் பரவுகிறது.

மனித உடலில் அதிகமாக அழுக்கு சேரும் இடங்கள் என்பதை தொடர்ந்தும் பார்க்கலாம்.

காது

அடுத்து நிறைய அழுக்கு சேரும் உடல் பாகமாக கருதப்படுவது காது. ஆனால், மருத்துவர்கள் காதில் இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டாம் என்றும், அகற்றுவது தான் காதுக்கு வலி தரும் என்றும் கூறுகிறார்கள். எனவே, காதில் இருக்கும் அழுக்கை அதன் போக்கில் விட்டுவிடுவது தான் நல்லது.

கண்கள்

கண்களில் கூட அழுக்கு இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்களா? குறிப்பாக நமது கண் இமைகளில் தான் அதிகமான கிருமிகள் இருக்கிறதாம். ஏனெனில், இவை தான் கண்ணுக்குள் கிருமிகள் போக முடியாது தடுக்கிறது.

வாய்

ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் நமது வாயில் மட்டுமே 615 விதமான பாக்டீரியாக்கள் இருப்பதாய் கண்டுபிடித்துள்ளனர். குறைந்தது ஓர் நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்தல் வேண்டும். சாப்பிட்டு முடித்த பிறகு வாய் கழுவ வேண்டும்.

மூக்கு

பல முறை நமக்கு மூக்குக்குள் ஏதோ குடைவது போல இருக்கும் ஆனால், நாகரீகம் கருதி ஏதும் செய்யமாட்டோம். நாம் சுவாசிக்கும் போது எண்ணற்ற பாக்டீரியாக்கள் மூக்கின் வழியாக தான் நமது உடலுக்குள் செல்கின்றன.

மூக்கு

பல முறை நமக்கு மூக்குக்குள் ஏதோ குடைவது போல இருக்கும் ஆனால், நாகரீகம் கருதி ஏதும் செய்யமாட்டோம். நாம் சுவாசிக்கும் போது எண்ணற்ற பாக்டீரியாக்கள் மூக்கின் வழியாக தான் நமது உடலுக்குள் செல்கின்றன.

10563 total views