சர்க்கரை நோயாளிகள் உருளைகிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா?.. என்னென்ன சாப்பிடக்கூடாது.!

Report
616Shares

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் ஒரு நோய் என்றால் அது சர்க்கரை வியாதிதான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு பின் சாதாரண வாழ்க்கை வாழ்வது என்பது மிகவும் கடினமாகும்.

சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும், கடுமையான உணவுமுறையும் அவசியமாகும். சர்க்கரை நோய் வந்துவிட்டால் சில ஆரோக்கிய உணவுகள் கூட அவர்களுக்கு ஆபத்தான உணவுகளாக மாறிவிடும். இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத ஆரோக்கிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உலர் திராட்சை

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் பழங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உலர் பழங்களை எடுத்துக்கொள்ளும்போது அது சர்க்கரை மற்றும் க்லேசம்யக் அளவை உடனடியாக உயர்த்தும். ஒரு கப் திராட்சையில் 27 கிராம் கார்போஹைட்ரேட் இருந்தால் ஒரு கப் உலர் திராட்சையில் 115 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். இதை சாப்பிடுவது திராட்சை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதை கடினமானதாக்கிவிடும்.

தர்பூசணி

சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிகளவு தர்பூசணி சாப்பிடுவது அவர்கள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். இதில் இருக்கும் க்ளெசமிக்கின் அளவு 72 ஆகும், இது மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும். நீங்கள் தர்பூசணி சாப்பிட விரும்பினால் அதன் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

உருளைக்கிழங்கு

இந்தியாவின் அனைத்து குடும்பங்களிலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு காய் என்றால் அது உருளைக்கிழங்குதான். இந்தியாவின் பெரும்பாலான உணவுகளில் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுகிறது. உருளைக்கிழங்கு சருமத்திற்கு மிகவும் நல்லதாகும், மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி, காப்பர், மாங்கனீசு போன்றவை அதிகம் உள்ளது. ஆனால் இதில் அதிகமாக இருக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் க்ளெசமிக் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.

மாம்பழம்

சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக சர்க்கரை இருக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது. அனைத்து பழங்களிலும் இயற்கையாக சர்க்கரை இருக்கும். இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இந்த நிலையில் மாம்பழத்தை தவிர்ப்பதுதான் நல்லது.

சப்போட்டா

சர்க்கரை நோயாளிகள் தொடவே கூடாத பழங்களில் முதல் இடம் வகிப்பது சப்போட்டாதான். மற்ற பழங்களை காட்டிலும் இது சர்க்கரையின் அளவை மிக அதிக அளவில் அதிகரிக்கக்கூடும்.

கொழுப்பு

நிறைந்த பால் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் பால் ஒரு முழுமையான உணவு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் பாலை உணவில் சேர்த்து கொள்ளும்போது சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவர்கள் கொழுப்பு நீக்கப்படாத பாலை குடிக்கக்கூடாது ஏனெனில் இதில் அதிக நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும். நிறைவுற்ற கொழுப்புகள் இன்சுலின் அளவு மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

பழச்சாறுகள்

பழச்சாறு அருந்துவதற்கு பதிலாக பழங்களை சாப்பிடுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருக்கும். பழத்தை ஜூஸ் போடுவது அதிலிருக்கும் நார்ச்சத்துக்களை இழக்க செய்யும். குறிப்பாக ப்ரெக்டொஸ் அதிகமிருக்கும் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

24814 total views