உயிருக்கு உலை வைக்கும் மீன்கள்! ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

Report
361Shares

மீன் பலருக்கும் மிகவும் பிடித்த அசைவ உணவு. ஆனால் மீன் சாப்பிடுவதில் கூட பல ஆபாயங்கள் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

ஏன் மீன் சாப்பிட்டால் மரணம் வரும் என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

மீன் என்னும் எமன்..!

கடல் மீனில் அதிக நச்சு தன்மை உள்ளது. நம் பூமியில் இயற்கையான மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். ஆனால் இயற்கைக்கு எதிரான மாற்றங்கள் நடந்தால் அது ஒட்டு மொத்த உலகையே அழித்து விடும். இப்படிப்பட்ட செயல்கள் கடலில் நாம் செய்வதால் அதன் இயல்பு மாறி விஷ தன்மை அடையும்.

மீனில் பாதரசமா..?

கடலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளது என்பதே. எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும்.

ஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது. மேலும் குழந்தைகள் பாதரசம் கலந்த கடல் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சினை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அலர்ஜி நச்சு தன்மை

கொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். அதில் ஒன்றுதான் ஒவ்வாமை. கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும். ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தி, சுவாச பிரச்சினைகளை தரும். இதனால் சில சமையம் மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளது.

ஏற்படும் நோய்கள் நச்சு தன்மை கொண்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் இந்த நோய்கள் உங்களுக்கு வரக்கூடும்.

1. ஆஸ்துமா

2. புற்றுநோய்

3. இதயம் சார்ந்த நோய்கள்

4. மன அழுத்தம்

5. நீரிழிவு

6. பார்வை குறைபாடு

7. மூளை நோய்கள்

8. குடல் கட்டிகள்

எந்தெந்த மீன்களை சாப்பிட கூடாது

  • பொதுவாகவே ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நச்சு தன்மை இருக்க அதிக வாய்ப்புள்ளது.
  • ஏற்றுமதி செய்யப்பட்ட கெளுத்தி, இறால், விலாங்கு மீன், கடல் பாஸ் ஆகியவற்றில் பாதரச தன்மை அதிகம் காணப்படும்.
  • எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நடுக்கடலில் கிடைக்கும் மீன்களை உண்டால் விரைவிலேயே உடல் உபாதைகள் ஏற்படும்.
  • குறிப்பாக சுறா மீன், வாள் மீன், திமிங்கலம் போன்றவற்றில் அதிக விஷ பொருட்கள் கலந்திருக்கும்.
  • ஏனெனில், இப்போதெல்லாம் நடுக்கடலில்தான் வேதி குப்பைகளை கொட்டிவிடுகின்றனர்.
  • இதில் இருக்கும் நச்சுதான் மீன்களின் தன்மைகளை மாற்றிவிடுகிறது.

11573 total views