பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு இதோ.. வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.!

Report
415Shares

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) என்பது, பிள்ளை பெறும் வயதில் உள்ள பெண்களிடையே காணப்படும் மிகப் பொதுவான ஹார்மோன் குறைபாடுகளில் ஒன்று. PCOSஆனது ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்பட்டிருக்கக் காரணம், அது ஒரேமாதிரி வெளிப்படும் பிரச்னை இல்லை.

PCOS கொண்ட பெண்கள் எல்லாருக்கும் இந்தக் குறைபாட்டுடன் தொடர்புடைய அறிகுறிகள் தோன்றுவதில்லை.

PCOSபற்றிப் பலருக்கும் பரவலாகத் தெரிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிகுறிகள் சில. உடல்சார்ந்த அறிகுறிகளான மாதவிடாய் ஒழுங்கின்மை, ஹிர்சுடிஸம் (அதீத முடி வளர்ச்சி), உடல்பருமன், முகப்பரு மற்றும் வழுக்கை. ஆனால், PCOS பிரச்னை கொண்ட பெண்களுக்கு மன நலப் பிரச்னைகள் வருகிற வாய்ப்பு அதிகம் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை, பேசுவதில்லை.

PCOS மற்றும் மனநிலைப் பிரச்னைகள்

PCOS உள்ள பெண்களுக்கு வரும் பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள் பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரே நேரத்தில் பல பிரச்னைகள் வரும்போது, அவர்களுடைய வாழ்க்கைத்தரம் எதிர்மறையாகப் பாதிக்கப்படலாம்.

மனமும் உடலும் ஒன்றோடொன்றும் பிணைந்துள்ளவை என்பதால், ஒன்றில் நிகழும் மாற்றங்கள் இன்னொன்றைப் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, PCOS உள்ள பெண்கள் அனுபவிக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் அவர்களுடைய மனோநிலைகள் அடிக்கடி மாறக்கூடும், அல்லது, அவர்கள் உணர்வுச் சமநிலையின்மையை அனுபவிக்கக்கூடும், இவை மனச்சோர்வின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

உடல்சார்ந்த விளைவுகள் ஒருபுறமிருக்க, PCOS உளவியல் மற்றும் சமூகத் தாக்கங்களையும் கொண்டுள்ளது, இவற்றைக் கையாள்வதன்மூலம் பெண்கள் இந்தப் பிரச்னையை முழுமையானமுறையில் சமாளிக்கலாம்.

PCOSக்கான சிகிச்சை பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. சிகிச்சையின் நோக்கம், அவருடைய அறிகுறிகளைக் கையாள்வது அல்லது குறைப்பது. அறிகுறிகள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்துப் பலவிதமான சிகிச்சைத் தெரிவுகள் பரிந்துரைக்கப்படலாம்.

கையாள்தலின் நோக்கம், பிரச்னையைச் சந்திப்பவருக்கு விஷயங்களைச் சொல்லித்தருவது, அவரை ஆதரிப்பது, ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது. மருந்துகளின்மூலம் வழங்கப்படும் சிகிச்சையுடன், வாழ்க்கைமுறை மாற்றங்களும் அவசியமாகலாம்.

உடற்பயிற்சி ஒழுங்கு, சரியான உணவு போன்றவை PCOSன் பல அம்சங்களை வெகுவாக மேம்படுத்தலாம். வாழ்க்கைமுறை மாற்றமானது PCOS உள்ள பெண்களுக்கான முதன்மைச் சிகிச்சையாக உள்ளது, ஏனெனில், எடையைக் குறைத்தல், எடை அதிகரிப்பதைத் தடுத்தல் ஆகியவை PCOSன் அறிகுறிகளை மேம்படுத்த, சிறந்த வாழ்க்கைத் தரத்தை எட்ட அவசியமானவை.

சரியான தீர்வு;

மேலும் பெண்களுக்கான இந்த மாதிரியான பல பிரச்சினை தீர்வுகளுக்கு மருத்துவர் காணொளியின் மூலம் கூறுவதை முழுவதையும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்...

15004 total views