காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்! ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?

Report
501Shares

ஒவ்வொரு பழத்திற்கு ஒரு தனி சிறப்பம்சமும் மகத்துவமும் உண்டு. பழங்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். எல்லா வகையான பழங்களும் நமக்கு நன்மை தரும் என சொல்ல முடியாது.

ஒரு சில பழங்கள் மருத்துவ தன்மை வாய்ந்ததாக இருக்கும். வேறு சில பழங்கள் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்ததாக இருக்கும்.

இந்த வரிசையில் தீமை தர கூடிய பழங்களும் உள்ளன. குறிப்பாக பழமானது சிறிது நிறம் மாறினாலே தீங்கை விளைவிக்குமாம். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வது சில சமையம் உடலுக்கு தீங்கினையும் ஏற்படுத்தும்.

உதாரணமாக இன்று வெறும் வயிற்றில் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் இது இரத்த அழுத்தம், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், அல்சர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.

இதில் அதிகப்படியான் இரும்பு சத்து உள்ளது, இது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. என்ன தான் சத்தான உணவாக இருந்தாலும் இதை வேறும் வயிற்றில் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா என்ற விவாதம் இருக்கிறது.

வாழைப்பழம் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது, இது உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் பசி வேதனையை குறைக்கிறது.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது. வாழைப்பழத்தில் 25 சதவீதம் சக்கரை அடங்கியுள்ளது. இது இரும்பு, டிரிப்டோபான், வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி ஆகிய மற்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

ஏன் காலையில் சாப்பிட கூடாது?

பல்வேறு ஆதாரங்களின்படி, வாழைப்பழங்களில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.

வாழைப்பழத்தில் உள்ள சக்கரை உங்களுக்கு சக்தியை அளித்தாலும், சில மணி நேரத்தில் அதை உறிஞ்சி எடுக்கிறது. வாழைப்பழங்கள் தற்காலிகமாக புத்துணர்வை அளித்தாலும், பின்னர் தூக்கம் மற்றும் களைப்பாக உணர வைக்கின்றன.

வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன. எனவே, இது வயிற்றுப் பிரச்சினைக்கு காரணமாக அமையலாம்.

ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து

புகழ்பெற்ற பெங்களூருவை சார்ந்த ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் அஞ்சூ சூட் இது பற்றி கூறும் போது வாழைப்பழங்களில் இயற்கையாகவே அமிலங்கள் உள்ளன. மேலும் அவற்றில் அதிக அளவு பொட்டாசியம் அடங்கியுள்ளது.

இவை காலையில் உண்ண சிறந்தது தான். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்ததல்ல. இதை ஆப்பிள் மற்றும் பிற பழங்களுடன் கலந்து சாப்பிவது, வாழைப்பழத்தில் உள்ள அமிலங்களை குறைக்க உதவுகிறது.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி ஒருவர் வெறும் வயிற்றில் எந்த ஒரு பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் இப்போது கிடைக்கும் பழங்கள் எதுவும் இயற்கையான பழங்களாக இருப்பதில்லை.

நாம் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழங்களையே சாப்பிடுகிறோம். இதில் உள்ள கேமிக்கல்கள் நமது உடலுக்கு சிறந்ததல்ல. நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. பிற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறந்தது.

வாழைப்பழம் ஒரு சிறந்த உணவு தான். அதை நீங்கள் வேறு சில பொருட்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது உங்கள் காலை நேரத்தை புத்துணர்ச்சியுசன் தொடங்க உதவியாக இருக்கும்.

16700 total views