மாதவிடாயில் இத்தனை பிரச்சனைகள் உள்ளதா? தவிர்ப்பது எப்படி.!

Report
190Shares

இன்றுள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் சரியான வயதை விட முன் வயதிலேயே தங்களின் பருவத்தை அடைகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மாதவிடாய் விலக்கும் சுமார் 40 வயதுகளிலேயே ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க சில பெண்கள் மாதவிடாய் நேரங்களில் பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு பல வழிமுறைகள் உள்ள நிலையில், சுமார் 100-ல் 80 பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனையானது இன்றுள்ள காலத்தில் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு கர்ப்பப்பை அல்லது சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனை, ஹார்மோன்களின் சமநிலை பிரச்சனை என்று பல காரணங்கள் உள்ளது.

இதன் காரணமாக பின்னாள்களில் தைராய்டு பிரச்சனையும், குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. நமது உணவு முறை பழக்க வழக்கம் மற்றும் மன அழுத்தம், ஆடைகளின் தேர்ந்தெடுத்தல் என்று பல காரணங்கள் உள்ள நிலையில், உடலுக்கு தேவையான மற்றும் சத்தான காய்கறிகளை எடுத்து கொள்ளாமல் இருத்தல் மற்றும் பழ வகைகளை சாப்பிட்டால் இருத்தல் போன்ற காரணங்களும் உள்ளது.

மாதவிடாயை பொறுத்த அளவு மாதவிடாய்க்கு ஈஸ்டிரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் வேதி பொருட்கள் முக்கிய பங்கை எடுத்து கொள்கிறது. இந்த சம்யத்தில் இதன் இரு அளவும் சமமாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. இதற்கு அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஹார்மோன்கள் சுரப்பதை சீர் செய்வதற்கு ஆளிவிதைகள் மற்றும் சோம்பினை சரியான அளவில் எடுத்து கொண்டு சிறிதளவு ஓம நீரை சேர்ந்து பருக வேண்டும்.

ஒரு தே.கரண்டியளவு கருஞ்சிரகம் எடுத்து கொண்டு அதனை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில் இருக்கும் ஆண்டி-இனபிலமோன்ட்ரி மற்றும் ஆண்டி-டைபீடிக், ஈஸ்டிரோஜன் காரணமாக நமது உடல் மற்றும் கருப்பையில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்பட்டு, மாதவிடாய் நிகழ்வானது சரியாக நிகழும்.

தினமும் எள்ளுருண்டை மற்றும் கருப்பு எள்ளுருண்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவற்றின் காரணமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைந்து, எலும்புகள் உறுதியாகும். உடல் எடையானது சீராக இருக்கும். கற்றாழை செடியின் கூழ், தேங்காய் பால் மற்றும் ஏலக்காய், பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பின் அளவானது குறையும்.

தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் வைட்டமின் சி காரணமாக உடலின் இரும்பு சத்தானது அதிகரிக்கும். நெல்லிக்காயை முதல் நாள் இரவில் தேனில் ஊறவைத்து, பின்னர் காலையில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. தேன் கிடைக்காத பட்சத்தில் நெல்லிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு, சுமார் ஒரு நாள் கழித்த பின்னர் அந்த நீரை பருகலாம்.

இந்த முறையில் அந்த நீரை ஒரு நாள் மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும். பின்னர் புதிய நெல்லிக்காயை எடுத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் குளுகோஸின் காரணமாக நார்சத்து உடலில் அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது ஹார்மோன்களின் அளவானது சீராக இருக்கும்.

மாதவிடாய் சரியாக வரவில்லை என்ற பட்சத்தில் ஆண்டிரோஜன் ஹார்மோன்களின் அளவானது அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே உடலில் தேவையற்று அதாவது, முகத்தில் உரோமங்கள் வளரும். இதனை தவிர்ப்பதற்கு ஆளி மற்றும் சோம்பு விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆண்டிரோஜனின் அளவானது சரிசெய்யப்பட்டு உரோமங்கள் வளர்வது சரி செய்யப்படும்.

மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய மாதுளை பழம், பீட்ருட் மற்றும் கேரட் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். சில நபர்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு பின்னர் மாதவிடாயானது ஏற்படும். இவ்வாறு இருக்கும் நபர்களுக்கு சுமார் ஏழு நாட்கள் தொடர்ந்து மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த சமயத்தில் வெளியேறும் இரத்தமானது கட்டி கட்டியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பொட்டு கடலையை நெய்யில் வறுத்து, உளர் திராட்சையை எடுத்து கொண்டால் உடலுக்கு நல்லது. இதன் மூலமாக அதிகளவு வெளியேறும் இரத்ததை தவிர்க்கலாம். சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கும் நபர்கள் சிறிதளவு கருஞ்சீரகத்தை சாப்பிடலாம்.

சில நபருக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில் இரத்தம் சரிவர வெளியேறவில்லை என்ற பட்சத்தில், இரும்பு சத்துள்ள பேரிட்சை பழம், உளர் திராட்சை, அத்தி பழம், மாதுளை பழம், கறிவேப்பில்லை, அகத்திக்கீரை மற்றும் சுண்டைக்காய் சார்ந்த உணவுகளை சாறாகவோ அல்லது உணவு போல் சமைத்து சப்பிடலாம்.

loading...