இந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா?.. இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க....

Report
243Shares

'சத்தான காய்கறி எது?' என்று கேட்டால் உங்களுக்கு எவையெல்லாம் நினைவில் வரும்? 'அவரைக்காய்... வெண்டைக்காய்...' என்று யோசித்துப் பார்க்கிறீர்களா?

காய்கறி என்ற பட்டியலுக்குள் உடனடியாக நினைவுக்குச் வராத சிலவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாய் அடங்கியுள்ளன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதிருங்கள். இலேசா நினைக்காதீங்க... இவைகளில் ஏகப்பட்ட சத்து அடங்கியிருக்குது

பீட்ரூட்

வேரில் கிடைக்கும் கிழங்கு வகை காய்கறிகளில் ஊட்டச்சத்தில் பீட்ரூட்டை அடித்துக்கொள்ள எதுவுமே கிடையாது. ஒரே ஒரு கப் பீட்ரூட்டில் 58 கலோரி ஆற்றல், 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து, ஒரு நாளைக்கு நாம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி அளவில் 11 விழுக்காடு, ஃபோலேட் சத்தின் அளவில் 37 விழுக்காடு ஆகியவை அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் பீட்ரூட் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.

சத்துக்கள்

உடலுக்கு ஊட்டச்சத்துகளை தருவதோடு இரத்த அழுத்தத்தின் அளவையும் பீட்ரூட் குறைக்கிறது. பீட்ரூட்டில் உள்ள அதிக அளவான நைட்ரேட் சத்து, இரத்த திசுக்களை தளர்த்துவதாக ஹார்வர்டு மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது. பீட்ரூட்டில் காணப்படும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி என்னும் நோய்தொற்றினால் ஏற்படும் அழற்சிகளை தடுக்கும் இயல்பு ஆகியவை அழற்சி தொடர்பான நோய்களுக்கும், புற்றுநோய்க்கும் எதிராக செயல்படக்கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புரூசெல்ஸ் முளைகட்டிய களைக்கோசு

சற்றே தீவிரமான நெடி கொண்டது புரூசெல்ஸ். ஆகவே, மக்கள் மத்தியில் சற்று வரவேற்பு குறைந்தது. ஆனாலும், அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியது. முளைகட்டிய களைக்கோசை ஒரு குவளை அளவு எடுத்து அவித்தால் அதில் 56 கலோரி ஆற்றலும் 4 கிராம் அளவு நார்ச்சத்தும், ஒரு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் ஏ அளவில் 24 விழுக்காடும், வைட்டமின் சி சத்து 162 விழுக்காடும், வைட்டமின் கே சத்து 274 விழுக்காடும் அடங்கியுள்ளது.

மேலும் ஒரு நாளைக்குத் தேவையானதில் 6 விழுக்காடு கால்சியம், 10 விழுக்காடு இரும்பு, 14 விழுக்காடு பொட்டாசியம் மற்றும் 18 விழுக்காடு மாங்கனீசு காணப்படுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடிய ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இதில் உள்ளன. நோய்த்தொற்று அழற்சிகளிலிருந்தும் இது உடலை பாதுகாக்கிறது. அழற்சியை குறைக்கக்கூடியதும் இரத்தத்தின் டிரைகிளைசரைடுகளையும் குறைக்கக்கூடிய ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களை உடலுக்குத் தருவதில் புரூசெல்ஸ் ஸ்ப்ராட்ஸ் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

முட்டைகோஸ்

முட்டைகோஸை சிலர் ஆரோக்கியமற்றது என்று கருதுகின்றனர். ஆனால், முட்டைகோஸை நறுக்கி ஒரு கப் எடுத்தால் அதில் 22 கலோரி ஆற்றலும் அநேக வைட்டமின்களும் அடங்கியிருக்கும். தினசரி உண்ணவேண்டிய வைட்டமின் சியின் அளவில் 54 விழுக்காடும், வைட்டமின் கே-யில் 85 விழுக்காடும், ஃபோலேட் 10 விழுக்காடும் மாங்கனீசில் 7 விழுக்காடும் முட்டைகோஸில் உள்ளது.

நாள்பட்ட நோய்தொற்று அழற்சியை குணமாக்க முட்டைகோஸ் உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக இது காக்கிறது. இதயநோய் உருவாகும் வாய்ப்பையும் முட்டைகோஸ் குறைக்கிறது. முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காய்கறிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் இயல்பு உள்ளது. ஆகவே, சாலெட் போன்ற அனைத்து உணவுகளிலும் முட்டைகோஸை பயன்படுத்துவது பலன் தரும்.

காலிஃபிளவர் என்னும் பூக்கோசு

காலிஃபிளவரில் என்ன சத்து இருந்துவிடப்போகிறது? என்று எல்லோருமே அலட்சியமாக எண்ணிவிடுகிறார்கள். சமைக்காத காலிஃபிளவர் ஒரு கப் எடுத்தால், அதில் 25 கலோரி ஆற்றல், 3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளில் மனிதனுக்குத் தேவைப்படும் வைட்டமின் சி சத்தில் 77 விழுக்காடு, வைட்டமின் கே சத்தில் 20 விழுக்காடு, வைட்டமின் பி6 இல் 11 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 14 விழுக்காடு, பொட்டாசியம் சத்தில் 9 விழுக்காடு, மாங்கனீசு சத்தில் 8 விழுக்காடு ஆகியவை உள்ளன.

புற்றுநோய் பாதிக்காமல் தடுக்கக்கூடிய பண்பும் இதற்கு உள்ளது. நோய் வராமல் தடுக்கக்கூடிய வண்ணம் செல்களை இயங்குவதற்கு தூண்டும் கொலைன் என்னும் சத்து முட்டைகோஸில் அதிகமாக காணப்படுகிறது.

வெங்காயம்

நறுக்கிய வெங்காயம் ஒரு கப் எடுத்தால், இதேபோன்ற மற்ற காய்கறிகளைப் போல புற்றுநோய்க்கு எதிராக போராடும் திறன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன், செரிமானத்தை தூண்டும் திறன் ஆகியவற்றோடு எலும்புகளுக்கு பலன் அளிக்கும் குணமும் இருப்பதோடு, 64 கலோரி ஆற்றலும் 3 கிராம் நார்ச்சத்தும், தினசரி தேவைப்படும் வைட்டமின் சி சத்தின் அளவில் 20 விழுக்காடும், வைட்டமின் பி6 அளவில் 10 விழுக்காடும், ஃபோலேட் சத்தில் 8 விழுக்காடும் பொட்டாசியம் சத்தில் 7 விழுக்காடும் மாங்கனீசு சத்தில் 10 விழுக்காடும் உள்ளன.

முள்ளங்கி

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு, கத்திரிப்பூ நிறம் என்று பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது பெரும்பாலும் சாலெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் அளவு முள்ளங்கியில் 19 கலோரி ஆற்றல், 2 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தில் 29 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 7 விழுக்காடு, பொட்டாசியம் 8 விழுக்காடு உள்ளது. சிறிதளவு வைட்டமின்கள் மற்றும் தாதுகளும் காணப்படுகின்றன.

சைனஸ் காரணமான வரும் அடைப்புகள் மற்றும் தொண்டை வலியை இது குணமாக்குகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள பைட்டோ ஊட்டச்சத்து பலவித நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது.

ரொமைன் லெட்யூஸ் என்னும் களைக்கோசு

ரொமைன் லெட்யூஸ் என்னும் ஒரு வகை களைக்கோசு ஒரு கப் எடுத்தால் அதில் 8 கலோரி ஆற்றல் இருக்கும். ஒரே ஒரு கிராம் நார்ச்சத்து, தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ (கண் பார்வைதிறன், செல் இயக்கம், நோய் தடுப்பு ஆற்றல் மீளுருவாக்கும் ஆரோக்கியம் இவற்றிற்கு இது தேவை) அளவில் 82 விழுக்காடு, வைட்டமின் சி சத்தில் 19 விழுக்காடு, வைட்டமின் கே அளவில் 60 விழுக்காடு, ஃபோலேட் சத்தில் 16 விழுக்காடு, கால்சியம் 2 விழுக்காடு, இரும்புச் சத்து 3 விழுக்காடு ஆகியவை காணப்படுகின்றன.

வீட்கிராஸ்

ஒரு கப் அளவிலான வீட்கிராஸ் என்னும் கீரையில் 4 கலோரி ஆற்றல், தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் ஏ சத்தில் 22 விழுக்காடு, வைட்டமின் சி சத்தில் 24 விழுக்காடு, வைட்டமின் கே பெருமளவாக 106 விழுக்காடு, கால்சியம் சத்து 4 விழுக்காடு மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

பீட்டா கரோடின் உள்ளிட்ட பல சத்துகள் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் இதில் காணப்படுகின்றன. ஆகவே, இந்த காய்கறிகளை சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் தவற விட்டு விடாதீர்கள்