அரிசியை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாது? மீறி சாப்பிட்டால் அபாயம் நிச்சயம்! ஆய்வில் வெளிவந்த தகவல்

Report
464Shares

நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளுக்கு ஒரு தனி தன்மை உண்டு. சில உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிட கூடிய தன்மை கொண்டதாக இருக்கும்.

சில உணவுகளை காலை நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். மேலும் சில உணவுகளை இரவு மட்டுமே சாப்பிட கூடும்.

இது அந்த உணவுகளின் தன்மையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

நாம் கண்ட நேரங்களில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அவை நேரடியாக நமது உடல் நலத்தை பாதித்து விடும். சில உணவுகள் குறைந்த அளவில் ஆபத்தை தரும்.

ஆனால், இறைச்சி போன்ற உணவுகளை கண்ட நேரங்களில் சாப்பிட்டால் அவற்றின் பாதிப்பு நீண்ட நாட்களாக உடலில் தங்கி அதன் பிறகு மிக அபாயகர நிலையை உண்டாக்கி விடும்.

இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும், கண்ட நேரங்களில் சாப்பிட்டால் எப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

அரிசி

நாம் நினைக்கும் நேரங்களில் எல்லாம் அரிசியை சாப்பிட கூடாது. அவ்வாறு நேரம் அறியாமல் அரிசியை சாப்பிடுவதால் நேரடியாக செரிமான மண்டலத்தை பாதிக்கும்.

அரிசியை மதிய நேரத்தில் சாப்பிடுவது தான் சிறந்தது. மிக முக்கியமாக இரவு நேரத்தில் அரிசியை சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை உடல் பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பால்

நிம்மதியான தூக்கத்தை தரும் தன்மை பாலில் உண்டு. பாலை இரவு நேரத்தில் குடிப்பது தான் சரியான முறையாகும். காலையில் பால் குடித்தால் செரிமான பிரச்சினைகளை அடிக்கடி ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மேலும், வயிற்று உப்பசம், அஜீரண கோளாறுகளும் உண்டாகும்.

உருளைக்கிழங்கு

கார்ப்ஸ் அதிகம் கொண்ட உணவுகளில் உருளை கிழங்கும் ஒன்று. உடலுக்கு அதிக ஆற்றலை இது தருவதால் இதை காலை அல்லது மதிய உணவாக சாப்பிடலாம். ஆனால், இரவு உணவாக சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், இதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

தயிர்

பொதுவாக நாம் சாப்பிடுவதை போன்று கண்ட நேரங்களில் தயிரை சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் மிக மோசமான விளைவை உண்டாக்கி விடும். மிக முக்கியமாக இரவு நேரத்தில் தயிரை சாப்பிடவே கூடாது. அதிக சளி தொல்லை ஏற்படுவதற்கு இது மிக முக்கிய காரணியாக உள்ளது. எனவே, மதிய நேரத்தில் தயிரை சாப்பிடுவது நல்லது.

சீஸ்

சீஸ் கலந்த உணவுகளை எல்லா நேரங்களிலும் சாப்பிடுவது நல்லது கிடையாது. இறைச்சிக்கு ஒரு சிறந்த மாற்றாக இது இருந்தாலும் இது உடல் எடை, வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, காலை நேரத்தில் சீஸ் சேர்த்த உணவுகளை சாப்பிடலாம். இரவு நேரத்தில் இதை தவிர்த்து விடலாம்.

வாழைப்பழம்

உடனடி சக்தியை தரும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. வாழைப்பழத்தை காலை உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கூடும். மேலும், மாலை 4 மணிக்கு வாழைப்பழத்தை ஸ்னாக்சாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

14435 total views